கால்பந்தாட்டம்: ஆப்பிரிக்க கோப்பையை நைஜீரியா வென்றது
Page 1 of 1

ஆப்பிரிக்க நாடுகள் இடையிலான கால்பந்தாட்டப் போட்டியில் நைஜீரியா மூன்றாவது தடவையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் ஞாயிறன்று நடந்த இறுதி ஆட்டத்தில் புர்கினோ ஃபாஸோவை 1-0 என்ற கோல் கணக்கில் நைஜீரியா வென்றது.
தொடர்புடைய விடயங்கள்
விளையாட்டு
நைஜீரிய அணியின் சண்டே ம்பா அற்புதமான கோலை அடித்து தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
ஆட்டத்தின் முதல் பாதியில் ம்பா இந்த கோலை அடித்திருந்தார்.
புர்கினோ பாஸோ அணியின் வில்ஃப்ரட் சனூ ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கோல் எண்ணிக்கையை சமன் செய்ய முயன்றார். ஆனால் நைஜீரிய கோல்கீப்பர் வின்செண்ட் என்யீமா தனது விரல் நுனியால் அந்த கோலைத் தடுத்து நிறுத்தி விட்டார்.
இதற்கு முந்தைய ஆப்பிரிக்க நாடுகளிடையிலான பந்தயங்களைப் பொறுத்தவரை வெளிநாடுகளில் நடந்த ஆட்டங்களில் ஒன்றைக்கூட வென்றிராத ஒரு அணியாக புர்கினோஃபாஸோ இருந்துவந்தது.
ஆனால் இந்தப் பந்தயத்தில் அது புது உத்வேகத்துடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
நைஜீரியாவை எடுத்துக் கொண்டால் 2000ஆம் ஆண்டு ஆப்பிரிக்க நாடுகளிடையிலான பந்தயத்தில் கெமரூனுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் தோற்றதன் பின்னர் இப்பந்தயத்தில் நைஜீரியா விளையாடிய முதல் இறுதி ஆட்டம் இது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» டி20: இலங்கையை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது மேற்கிந்தியத் தீவுகள்
» அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்
» ஆப்பிரிக்க குழந்தையை தத்தெடுத்த ப்ரீடா!
» நைஜீரியா: திவிரவாதிகள் பதுங்குமிடம் மீது ராணுவம் துப்பாக்கிச் சூடு - 14 பேர் பலி
» இந்தியாவுக்கே எதிரியானார் ஆர்யா! உலக கோப்பையை பாக்., கைப்பற்றுமாம்!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum