ஹைதராபாத் டெஸ்ட்-வலுவான நிலையில் இந்தியா
Page 1 of 1

ஹைதராபாத்தில் நடக்கும் இரண்டாம் டெஸ்ட்டின் மூன்றாம் நாள் ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 74 ரன்களை எடுத்துள்ளது.
அந்த அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டத்தை முடித்துக் கொண்டது. அதன் பிறகு தனது முதல் இன்னிங்சைத் துவங்கிய இந்திய அணி சத்தீஸ்வர் பூஜாரா மற்றும் முரளி விஜயின் சிறப்பான ஆட்டம் காரணமாக 503 ரன்களைக் குவித்தது.
பூஜாரா 204 ரன்களை அடித்தார். அவரோடு ஜோடி சேர்ந்து ஆடிய முரளி விஜய் 167 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தனர். ஷேவாக் வெறும் ஆறு ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தும், இந்த இருவரும் சிறப்பாக ஆடி இரண்டாம் விக்கெட்டுக்கு 370 ரன்களை சேர்த்தனர்.
சென்னை டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து வெற்றியீட்டித் தந்த கேப்டன் மகேந்திர சிங் டோணி இன்று 43 பந்துகளில் 44 ரன்களை எடுத்தார். ஆனால் மற்றவர்கள் பெரிதாக ரன் குவிக்கவில்லை. இதனால் கடைசி 9 விக்கெட்டுகள் 116 ரன்கள் இடைவெளியில் வீழ்ந்தன.
இருந்தும் பூஜாரா மற்றும் விஜயின் அபார ஆட்டம் காரணமாக இந்திய அணி முதல் இன்னிங்சில் 266 ரன்களை கூடுதலாகப் பெற முடிந்தது.
பிறகு தனது இரண்டாம் இன்னிங்சைத் துவக்கிய ஆஸ்திரேலிய அணி துவக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் மற்றும் பிலிப் ஹூக்சின் விக்கெட்டுக்களை இழந்தது. ஆட்ட நேர முடிவில் அந்த அணி தனது இரண்டாம் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் என்ற நிலையில் இருக்கிறது. இன்னிங்ஸ் தோல்வியைத் தடுக்க ஆஸ்திரேலியா இன்னமும் 192 ரன்களை எடுத்தாக வேண்டும்.
நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் போட்டியில் ஏற்கனவே இந்தியா வென்றுள்ளது

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சாய்னாவுக்கு வெண்கலம்! வெற்றியை கொண்டாட முடியாத நிலையில் இந்தியா!
» இந்தியா மீண்டும் டெஸ்ட் போட்டியில் ‘நம்பர் 1’ இடத்தை பிடிக்கும் – சச்சின் டெண்டுல்கர்
» வலுவான எலும்புகளை பெற கீரை கொடுங்க!!!
» வலுவான எலும்புகளை பெற கீரை கொடுங்க!
» வலுவான பிரேரணை தேவை' - தமிழ் கத்தோலிக்க மதகுருமார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum