தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராஜகுமாரன் பராக்...பராக்...

Go down

ராஜகுமாரன் பராக்...பராக்... Empty ராஜகுமாரன் பராக்...பராக்...

Post  ishwarya Sat Mar 09, 2013 5:49 pm


சில பல வருடங்களுக்கு முன் தேவயானியின் கணவர் போஸ்டில் இருக்கும் ராஜகுமாரன் திருமதி தமிழ் என்ற படத்தை திருமதி ராஜகுமாரன் தயா‌ரிப்பில் தொடங்கியது நினைவிருக்கிறதா? துர்சம்பவங்களை உடனடியாக மறந்துவிடுகிறவராக இருந்தால் பரவாயில்லை. நாம் மீண்டும் ஞாபகப்படுத்துகிறோம். அப்படியொரு படம் தொடங்கப்பட்டு சில வாரங்கள் ஷூட்டிங்கும் நடந்தது.

படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் இவற்றுடன் ஆக்சன் ஹீரோ பொறுப்பையும் ராஜகுமாரனே ஏற்றிருந்தார். ஹீரோயின் கீர்த்தி சாவ்லா. தேவயானிக்கு வக்கீல் வேடம். ராஜகுமாரனின் இந்த விஸ்வரூபத்தை தாங்காமல் படம் பாதி தாண்டுவதற்குள் புட்டுக் கொண்டது. இப்போது மீண்டும் திருமதி தமிழை தூசு தட்டியிருக்கிறார் தேவயானி. அவருக்கும் தனது கணவரை ஹீரோவாக பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்காதா?

ஆக, சீ‌ரியலில் சம்பாதித்ததை திருமதி தமிழில் போடுவது என்ற முடிவுடன் மீண்டும் படம் குறித்து அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். ஆக்சன் ஹீரோ என்பதால் சாப்பாட்டறையில் கழித்த பொழுதை இப்போது உடற்பயிற்சி கூடத்தில் செலவிட்டு வருகிறார் ராஜகுமாரன்.

தமிழ் ரசிகனுக்கு சோதனை எந்தப் பக்கமிருந்து வரும் என்று சொல்ல முடியாது போலிருக்கே.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum