செப்டம்பர் மாத பிரசாதங்கள் : கோதுமை மாவு பால் கொழுக்கட்டை
Page 1 of 1

பொதுவாகவே விநாயகர் படத்திலோ, சிலையிலோ, அவர் தன் நாற்கரங்களில் கீழ் வலது கரத்தில் ஒரு மோதகத்தைத் தாங்கியிருப்பதைக் காணலாம். அநேகமாக வேறு எந்த தெய்வமும் இப்படி தனக்குப் பிரசாதமாகப் படைக்கப்படும் உணவுப் பொருட்களில் பிரதானமானதைத் தன் கையில் ஏந்தியபடி காட்சி கொடுப்பதில்லை. அந்த அளவுக்கு விநாயகர் நம் வாழ்வோடு ஒன்றியவர்; நமக்கிணையாகவே நம்மோடு வந்து நம்மை வழிநடத்துபவர். அப்படி அவர் கையில் வைத்திருக்கும் மோதகத்துக்கு (கொழுக்கட்டைக்கு) தத்துவார்த்தமான விளக்கம் என்ன தெரியுமா? வெளியே மாவு - அண்டம்; உள்ளே பூர்ணம் - பிரம்மம்! நம் விக்னமெல்லாம் விரட்டும் விநாயகருக்கு விசேஷ பிரசாதங்கள் தயாரிக்கலாம், வாருங்கள்.
-சந்திரலேகா ராமமூர்த்தி
என்னென்ன தேவை?
கோதுமை மாவு - 250 கிராம், வெல்லம் - 200 கிராம், தேங்காய் - ஒரு மூடி (பெரியதாக), ஏலக்காய் - 2, நெய் - 4 டீஸ்பூன், உலர்ந்த திராட்சை, முந்திரி - தலா 20, உப்பு, கேசரி பவுடர் - தலா 1 சிட்டிகை.
எப்படிச் செய்வது?
கோதுமை மாவை சலித்து, அத்துடன் உப்பு, நெய் கலந்து, தண்ணீர் விட்டு, கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். பிறகு சப்பாத்திகளாக இட்டு, குறுக்கும், நெடுக்குமாகக் கீறி, ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தனியே எடுத்து வைக்கவும். தேங்காயைத் துருவி, முதல், இரண்டாம் பால் எடுக்கவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து வைக்கவும். ஏலக்காயைப் பொடித்து வைக்கவும். வெல்லத்தை சிறிது தண்ணீரில் கரைத்துக் கொதிக்க வைத்து, வடிகட்டி வைக்கவும். வாயகன்ற பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டுக் கொதிக்கவிடவும். தண்ணீர் கொதிக்கும்போது, வெட்டி வைத்துள்ள சப்பாத்தித் துண்டுகளை ஒவ்வொன்றாக, ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் போடவும். இரண்டாவது தேங்காய் பால் விட்டு மறுபடி கொதிக்கவிடவும். கலவை, பாயச பதத்துக்கு வந்ததும் முதல் பால், வறுத்த முந்திரி, திராட்சை, கேசரி பவுடர், ஏலக்காய் தூள் சேர்த்துக் கொதி வரும்போது, வெல்லக் கரைசல் விட்டுக் கலந்து, இறக்கவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» செப்டம்பர் மாத பிரசாதங்கள் : கருப்பு கொண்டைக்கடலை சுண்டல்
» செப்டம்பர் மாத பிரசாதங்கள் : பச்சரிசி-தேங்காய் கொழுக்கட்டை
» ஆகஸ்ட் மாத பிரசாதங்கள் : மைதா மாவு சீடை
» செப்டம்பர் மாத பிரசாதங்கள் : அம்மணி காரக் கொழுக்கட்டை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum