ஆகஸ்ட் மாத பிரசாதங்கள் : மைதா மாவு சீடை
Page 1 of 1
ஆகஸ்ட் மாத பிரசாதங்கள் : மைதா மாவு சீடை
தனக்கு அர்ப்பணிக்கப்படும் பிரசாதங்களை இறைவன் ஏற்றுக் கொள்கிறானா என்ன? குதர்க்கவாதிகள் இப்படி வம்பு சுகத்துக்காக வாதிடலாம். ஆனால், இறைவன் நாம் கேட்காமலேயே கொடுக்கிறார் என்பதைப் பலரும் அனுபவித்து உணராமல் இல்லை. நமக்கு சிறு உதவி செய்தவருக்கும் ‘தாங்ஸ்’ என்று ஒரு வார்த்தையில் நன்றி தெரிவிக்கும் நாம், நமக்கு எல்லாம் தரும் இறைவன் முன்னால் அவன் தந்தவற்றில் ஒரு சிறு துளியை நிவேதிக்கக் கூடாதா? நிவேதனம் என்றாலே ‘அறிவிக்கிறேன்’ என்றுதான் பொருள். அதாவது தாங்ஸ்! இப்படி இம்மாதம் புதுவகை நிவேதனங்களைத் தயாரித்து இறைவனுக்கு நிவேதிப்போம்; அதாவது நன்றி தெரிவிப்போம். சந்திரலேகா ராமமூர்த்தி
மைதா மாவு சீடை
என்னென்ன தேவை?
வறுத்து, அரைத்த உளுத்த மாவு, கடலை மாவு (சலித்தது) - தலா 1 டேபிள் ஸ்பூன், மைதா மாவு - 2 கப், பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை, நெய் - 2 டீஸ்பூன், உடைத்த மிளகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன், தேங்காய் துருவல் - சிறிது, எண்ணெய் - பொரிப்பதற்கு, உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
இட்லி பானையில் தண்ணீர் வைத்து, ஒரு தட்டைப் போட்டு, மைதா மாவை ஒரு வெள்ளைத் துணியில் மூட்டை மாதிரி கட்டி 5 நிமிடங்களுக்கு ஆவியில் வேக வைத்து, பிறகு எடுத்து உதிர்த்து, ஆற வைத்துக் கொள்ளவும். எண்ணெய் தவிர மற்ற எல்லாப் பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து, முறுக்கு மாவை விடக் கெட்டியாக, உதிராமல் பிசைந்து கொள்ளவும். பிறகு அதைச் சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி, ஒன்றோடு ஒன்று ஒட்டாதபடி, தனித்தனியே போட்டு, ஈரம் வற்றும் வரை விட்டு, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். ஆறியதும் டப்பாவில் போட்டு வைக்கவும். விருப்பப்பட்டோர், தேங்காய் எண்ணெயிலும் இந்த சீடைகளைப் பொரிக்கலாம். இதனால் வாசனை தூக்கலாக இருக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆகஸ்ட் மாத பிரசாதங்கள் : கோகனட் கிரிஸ்பி ரோல்ஸ்
» ஆகஸ்ட் மாத பிரசாதங்கள் : கடலைப் பருப்பு ஸ்வீட்
» ஆகஸ்ட் மாத பிரசாதங்கள் : உளுத்தம் பருப்பு சித்ரான்னம்

» செப்டம்பர் மாத பிரசாதங்கள் : கோதுமை மாவு பால் கொழுக்கட்டை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum