தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தீபாவளி ஒரு குதூகலமான கொண்டாட்டம்!

Go down

தீபாவளி ஒரு குதூகலமான கொண்டாட்டம்!  Empty தீபாவளி ஒரு குதூகலமான கொண்டாட்டம்!

Post  meenu Sat Mar 09, 2013 12:33 pm

வாழ்க்கை எவ்வளவு தான் நவீனமாகட்டும்; கம்ப்யூட்டர், சாட்டிலைட் யுகமாகட்டும்; இந்துப் பண்டிகைகளைப் பொறுத்தவரை கொண்டாட்டத்துக்கு மட்டும் குறைவிருந்ததில்லை. பண்டிகைகளில் தீபாவளியை ஒரு முழுமையான கொண்டாட்டமாகவே குறிப்பிடலாம். தலைக்குக் குளித்து, புத்தாடை அணிந்து, வகை வகையான பலகாரங்கள் உட்கொண்டு, பட்டாசு வெடித்து... வேறு எந்தப் பண்டிகையும் இத்தனை முழுமையாக அமைவதில்லை!

இந்த தீபாவளிப் பண்டிகை, ஐப்பசி மாதத்தில் (அக்டோபர் - நவம்பர்) வருகிறது. ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்றும் சொல்வார்கள். ஒரு து லாக்கோல் (தராசு) எப்படிச் சரிசமமாக நிற்கிறதோ, அதேபோல இந்த மாதத்தில் பகல் பொழுதும் இரவுப் பொழுதும் ஒரே நேர அளவினைக் கொண் டதாக இருக்கும்.
சூரியன் தன்னுடைய சஞ்சாரத்தின்போது ஒவ்வொரு மாதத்திலும் ஒரு ராசியைத் தன் வீடாகக் கொண்டு தங்கியிருக்கிறார். அந்த வகையில் ஐப்பசி மாதத்தில், துலா ராசியில் அவர் தங்குகிறார். அதனாலேயே சூரியன் வசிக்கும் இந்த ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்று நம் முன்னோர்கள் குறிப் பிட்டார்கள்.
நரகாசுரனை கிருஷ்ண பரமாத்மா அழித்த நாளே தீபாவளி விழா என்றாலும் இந்த விழாவுக்குப் பின்னால் பூமாதேவியின் பொறுமை இருக்கிறது.

மனிதர்களிடம் அவள் காட்டிய அன்பு மிளிர்கிறது. சொந்த ரத்த பந்தத்தைவிட உலக மக்கள் நலனே முக்கியம் என்ற நீதியை உணர்த்தும் விழாவே தீபா வளி.
இதற்குமுன் வராக அவதாரமெடுத்து, ஹிரண்யாட்சன் என்ற அரக்கனிடமிருந்து பூமாதேவியை மீட்டார் மஹாவிஷ்ணு. அப்போது அவருக்கும் பூமாதே விக்கும் பிறந்தவனே இந்த நரகாசுரன். பிறகு கிருஷ்ணாவதாரத்தில், நரகாசுரனை அழிக்க பகவான் சத்யபாமாவுடன் வந்தார். இந்த சத்யபாமா, பூமா தேவியின் அம்சம். அதாவது நரகாசுரனுடைய தாயான பூமாதேவியே சத்யபாமாவாக அவதாரம் எடுத்து மகனை அழிக்க கிருஷ்ணருடன் வந்தாள். தாயாகிய சத்யபாமாவின் கைகளாலேயே மடிந்தான் நரகாசுரன்.

உலக நன்மைக்காக, உலக மக்களின நல்வாழ்வுக்காக, தன் புத்திர பாசத்தையும் மீறி தன் கைகளாலேயே மகனைக் கொன்றவள் சத்யபாமா. அவ னுக்கு பவுமன் என்று பெயர் வைத்து, யாரை இரு கரங்களால் வாரி முத்தமிட்டு கொஞ்சி மகிழ்ந்தாளோ, எந்த மகன் நான்கு பேர் புகழ வாழ வேண் டுமென்று ஆசைப்பட்டாளோ, அந்த மகனைத் தன் கைகளாலேயே கொன்றாள். ‘‘அம்மா’’ என்று அழைத்தபடி தன் மடியில் சாய்ந்த நரகாசுரனைக் கண்டு, சத்யபாமாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. ஆனாலும் உலக மக்களின் நன்மைக்காக மகனின் இறப்பைத் தாங்கிக் கொண்டாள். அப்படியும், அந்தத் தாய்க்கு ஒரு சின்ன சந்தோஷம். மகன் சாகும்போதாவது அவனுக்கு பகவானை நேரில் பார்க்கும் பாக்கியம் கிடைத்ததே என்று ஆனந்தப்படுகிறாள். மகன் இறந்த துக்கத்திலும் மற்றவர்கள் சந்தோஷப்படுகிறார்களே என்று மகிழ்ச்சியடைகிறாள் அந்த தாய். அப்போதுதான் எந்தத் தாய்க்கும் தோன்றாத நினைப்பு பூமாதேவிக்குத் தோன்றியது.

‘‘சுவாமி! இனி ஒவ்வொரு வருடமும் இந்த நாளில், மக்கள் அருணோதய காலத்தில் தலையில் எண்ணெய் வைத்து, வெந்நீரில் ஸ்நானம் செய்ய வேண்டும். இன்றைய தினம் புத்தாடை உடுத்தி, விருந்துண்டு, பட்டாசுகள் வெடித்து மகிழ வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டாள். இங்கே பூமாதேவியின் கருணை நம்மை சிலிர்க்க வைக்கிறது. எண்ணெய் தேய்த்து வெந்நீரில் மங்கல நீராட வேண்டும் என்று அவள் பகவானிடம் கேட்டிருக்கிறாள். அதாவது தீபாவளி அன்று, எண்ணெயில் லட்சுமியும் வெந்நீரில் கங்காதேவியும் வாசம் செய்கிறார்கள். இரு தேவியரின் அருளும் கிடைக்க வேண்டும் என்றுதான் பூமாதேவி அப்படி ஒரு வரத்தை வாங்கியிருக்கிறாள். அதனால்தான் தீபாவளி அன்று, ‘‘கங்கா ஸ்நானம் ஆச்சா?’’ என்று கேட்கிறோம். அன்றைய தினம் ‘கங்கா ஸ்நானம்’ செய்பவர்களுக்கு நோய்களும் நரக பயமும் நீங்கும் என்பது நம்பிக்கை.

கலிஃபோர்னியா - இந்தியாவின் பாதாள உலகம் புராணங்கள் விவரிக்கும் பாதாள உலகம், பகீரதனுடைய கோரிக்கையை ஏற்று கங்கை பாய்ந்த பாதாள உலகம் இன்றும் இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? இருக்கிறது! வேடிக்கையாகச் சொல்வார்கள்: இந்திய பூமியை தோண்டிக்கொண்டே போனால்,
இறுதியில் கீழே அமெரிக்காவைத் தொடலாம் என்பார்கள்! அப்படி இந்தியாவிலிருந்து நேர்க்கோடாக, அடியில் உள்ள அமெரிக்காவைச் சேர்ந்ததுதான் கலிஃபோர்னியா. இங்கே உள்ள ஒரு தீவின் பெயர் ஆஷ் ஐலண்ட் -சாம்பல் தீவு. சகரர்கள் சாம்பலாகிப் போனார்களே, அந்த ‘பாதாள லோகம்’தான் இப்போதைய கலிஃபோர்னிய சாம்பல் தீவு என்கிறார்கள் புராண ஆராய்ச்சியாளர் கள். இந்தச் சாம்பலைக் கரைத்த கங்கை நீர்தான் இப்போது சாம்பல் தீவைச் சூழ்ந்துள்ள நீர்ப்பகுதி என்றும் சொல்கிறார்கள்.

இந்தத் தீவில் எரிமலைகள் உண்டு என்றும் அவை கக்கும் தீப்புழம்புகளால் உருவான சாம்பல் படர்ந்த பகுதிதான் இது, அதனால்தான் இது சாம் பல் தீவு என்றழைக்கப்படுகிறது என்றும் புவியியல் நிபுணர்கள் வாதிடுகிறார்கள். பாதாள உலகத்தில் இருந்த கபில முனிவரின் அக்கினி ஆற்றல்தான் எரிமலையாக மாறியிருக்கிறது என்பது புராண ஆராச்சியாளர்களின் கருத்து. அதுமட்டுமல்ல, இந்திரன் திருடிக்கொண்டு வந்து கட்டி வைத்ததாகச் சொல்லப்படும் அந்தக் குதிரை கட்டப்பட்ட இடமும் கலிஃபோர்னியாவில் உள் ளது. அந்த இடம், ‘ஹார்ஸ் ஐலண்ட்’ (குதிரைத் தீவு) என்றழைக்கப்படுகிறது! ஆக, அஸ்வமேத யாகத்துக்குக் குதிரையை இந்திரன் கவர்ந்து வந்து கட்டி வைத்த அந்நாளைய இடம்தான் இப்போதைய கலிஃபோர்னிய ஹார்ஸ் ஐலண்ட் என்றும் கபில முனிவர் சகரர்களைத் தன் பார்வையால் எரித்துச் சாம்பலாக்கிய இடம்தான் கலிஃபோர்னிய ஆஷ் ஐலண்ட் என்றும் சொல்லப் படுவதில் உண்மை ஏன் இருக்கக் கூடாது!?

இன்னொரு விஷயம். இந்த ஆஷ் ஐலண்ட் பகுதியில் நீர்நிலை என்றுமே வற்றுவது கிடையாதாம்! பாதாளத்தில் பாய்ந்தாலும் கங்கை வற்றுமா என்ன?
தமிழ்நாட்டு தீபாவளி தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நான்கு நாட்களை தீபாவளிக் கொண்டாட்டத்துடன் தொடர்பு படுத்துகின்றன புராணங்கள். அதாவது ஐப்பசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச த்ரயோதசி முதல் பிரதமை வரையிலான நான்கு நாட்கள்தான் இப்படி அனுசரிக்கப்பட வேண்டியவை என்பார்கள்.
பாற்கடலைக் கடைந்தபோது நஞ்சு வெளிப்பட்டதே அது த்ரயோதசி அன்றுதான். அடுத்த நாள் சதுர்த்தசி அன்று அமிர்தமும் மஹாலட்சுமியும் பாற்கடலிலிருந்து தோன்றினார்கள். அதாவது தீமை விலகி நன்மை உலகை அரவ ணைத்த தினம். நரகாசுரன் வதம் செய்யப்பட்ட நாள் சதுர்த்தசி தினம். மகாபலியை மஹாவிஷ்ணு பாதாளத்தில் அமிழ்த்திய தினமும் இதுதான். இப்ப டியாக எல்லாத்தீமைகளும் அழிந்து நன்மைகள் பெருகும் நாள்தான் தீபாவளித் திருநாள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum