தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

Go down

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் Empty கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

Post  amma Fri Jan 11, 2013 2:11 pm


* `கிறிஸ்துமஸ்' என்பதை எளிய ஆங்கிலத்தில் `எக்ஸ்மஸ்' என்று எழுதுவார்கள். இதன் காரணம் கிறிஸ்து என்ற கிரேக்க வார்த்தையின் முதல் எழுத்தான `சை'இ ஆங்கிலத்தின் `எக்ஸ்' வடிவிலேயே இருக்கும்.

*`சூரியனின் பிறப்பு விழா' என்ற பண்டைய ரோமானியப் பண்டிகைக்கு மாற்றாகவே, டிசம்பர் 25ந்தேதியில் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடும் வழக்கம் தோன்றியது. இயேசுவை ஒளியின் பிறப்பிடமாக கிறிஸ்தவர்கள் கருதுவதே இதற்கு காரணம்.

* கி.பி.4ஆம் நூற்றாண்டில் துருக்கியில் வாழ்ந்த ஆயரான புனித நிக்கோலாஸ் ஏழைகளுக்கு உதவி செய்வதிலும், குழந்தைகளை மகிழ்விப்பதிலும் ஆர்வம் காட்டி வந்தார். அவர்தான் இன்றைய கிறிஸ்துமஸ் தாத்தாக்களின் முன்னோடி. தொப்பி, தொப்பையுடன் கூடிய தற்போதைய `சான்டாகிளாஸ்' உருவம், தாமஸ் மூர் என்பவரால் 19ஆம் நூற்றாண்டில் உண்டாக்கப்பட்டது.

* கி.பி.7ஆம் நூற்றாண்டில் ஸ்காண்டிநேவிய மக்கள் கிறிஸ்தவர்களாக மாறியபோது, அவர்களின் சின்னமாக இருந்த ஃபிர் மரம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் இடம்பெறத் தொடங்கியது. இதுதான், கிறிஸ்துமஸ் மரம் தோன்றிய கதை.

* இயேசுவின் பிறப்பை முன்னறிவிக்கும் விதமாக, வீடுகளுக்கு சென்று கிறிஸ்துமஸ் (கேரல்) கீதங்களைப் பாடும் வழக்கம் 11ஆம் நூற்றாண்டில் தோன்றியது.

* இத்தாலி நாட்டின் கிரேச்சியா என்ற இடத்தில் 1223ஆம் ஆண்டு, அசிசி புனித பிரான்சிஸ் இயேசு பிறந்த காட்சியை முதல் முதலாக மனிதர்களையும், மிருகங்களையும் கொண்டு அமைத்தார். அதில் இருந்துதான் கிறிஸ்துமஸ் விழாவின்போது குடில்களை அமைக்கும் பழக்கம் உருவானது.

* குழந்தை இயேசுவை வணங்க வந்த ஞானிகளுக்கு வழிகாட்டிய நட்சத்திரம், 16ஆம் நூற்றாண்டு முதல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் அடையாளமாக மாறியது.

* 18ஆம் நூற்றாண்டின் மத்தியில் இருந்து, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் கேக்குகளும் முக்கிய இடம் பிடித்தன.

* 1843ஆம் ஆண்டு, ஹென்றி கோல் என்பவர் அச்சிட்ட கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள்தான் உலக வரலாற்றின் முதல் வாழ்த்து அட்டைகள்.

* கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது, பரிசுப் பொருட்களைப் பகிர்ந்துகொள்ளும் வழக்கம் 20 நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றி வளர்ந்தது.

* கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி, உலகின் பெரும்பாலான மக்கள் கொண்டாடும் சமயம் சார்ந்த பண்டிகைகளில் முதன்மையானதாக கிறிஸ்துமஸ் விளங்குகிறது.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum