தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆண்பாவம் ‌ரீமேக் - சுந்தர் சி. இயக்குகிறார்

Go down

ஆண்பாவம் ‌ரீமேக் - சுந்தர் சி. இயக்குகிறார் Empty ஆண்பாவம் ‌ரீமேக் - சுந்தர் சி. இயக்குகிறார்

Post  ishwarya Sat Mar 09, 2013 12:14 pm


ஆண்பாவம் படத்தின் ‌ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார் என்று ஏற்கனவே தெ‌ரிவித்திருந்தோம். அந்த காமெடிப் படத்தை இயக்க ச‌ரியான சாரதி கிடைத்துள்ளார்.

தனது பர்சனாலிட்டிக்கு எது பொருந்தும் என்பது உதயநிதி ஸ்டாலினுக்கு தெ‌ரிந்திருக்கிறது. முதல் படம் ஹிட் என்பதால் தடாலடியாக தமிழக மக்களை காப்பாற்றும் ஆக்சன் ஹீரோ அவதாரத்தை அவர் எடுக்கவில்லை. நின்று நிதானித்து ஆண்பாவம் படத்தை ‌ரீமேக் செய்வது என்று முடிவெடுத்துள்ளார். பாண்டியராஜன் வேடத்தில் இவர். பாண்டியன் வேடத்தில் சந்தானம். இந்த காம்பினேஷனுக்கு ஐம்பது கோடி இப்போதே கியாரண்டி.

இந்த ‌ரீமேக்கை இயக்கப் போகிறவர் சுந்தர் சி-யாம். கலகலப்பு என்ற வெற்றிப் படத்தை தந்தவர் என்பதால் கலெக்சன் கன்னாபின்னாவென்று எகிறப் போகிறது. உதயநிதி தயா‌ரிக்கப் போகும் மூன்றுப் படங்களில் இதுவும் ஒன்று என்பதை சொல்லித் தெ‌ரிய வேண்டியதில்லை.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum