தம்பதியர் கொண்டாடும் திருக்கோயில்
Page 1 of 1
தம்பதியர் கொண்டாடும் திருக்கோயில்
பொருநை நதியோடும் திருநெல்வேலி மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் புளியங்குடிக்கு அருகில் உள்ளது வாசுதேவநல்லூர் எனும் அழகிய ஊர். இயற்கை பொய்க்காததால் வளம் தானாய் கொழித்து நெல்லையின் நெற்களஞ்சியம் என அழைக்கப்பட்டது. இயற்கையோடு சேர்ந்த புராணமும் இவ்வூரின் பெருமையை இன்னும் உயர்த்தியது.
ஆணும், பெண்ணும் வெவ்வேறல்ல... இரண்டும் சமமே எனும் தத்துவத்தினை நிலைநிறுத்துவதே அர்த்தநாரீஸ்வர வடிவம். ஈசன் உமையொருபாகனாய் நிற்கும் அற்புதக் கோலம். சேலம் மாவட்டம் திருச்செங்கோட்டிற்கு அடுத்து நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரிலும் உள்ளது. எல்லா சிவாலயங்களிலும் ஈசனுக்கும், அம்மைக்கும் தனித்தனி சந்நதிதான் இருக்கும். ஆனால், இங்கு ஈருருவும் ஓருருவாகி ஒரே சந்நதியில் நின்ற கோலம் காணுதற்கரிது.
கயிலையில் உலகாளும் அருட் தம்பதியரான பரமேஸ்வரனையும், பார்வதியையும் பலரும் தரிசித்து பெரும்பேறுற்று கயிலை வாசம் புரிவர். பிருங்கி முனிவர் சற்று பிசகான எண்ணம் கொண்டிருந்தார். பரமேஸ்வரனே தன் தேவன், அவர் தவிர, ஏன், பார்வதி தேவியார் கூட முக்கியமன்று என அலட்சியம் காட்டினார். வண்டுருவில் ஐயனுக்கும், அம்மைக்கும் நடுவில் புகுந்து கயிலை நாயகனை மட்டும் வழிபட்டார்.
இதைக் கண்ட தேவி நம்மிருவரும் வெவ்வேறல்லவே, ஒரே சக்திதானே என ஈசனிடம் ஏக்கமாகப் பேசினாள். ஈசனும் பிருங்கி ரிஷி இதை அறியும்படிச் செய்ய தம்மில் பாதியாக விளங்கும் அம்மையோடு உயர்ந்த கோலம் காட்டியருளினார். அதுவே திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்.
‘‘தேவி இன்னும் பலர் நீ வேறு நான் வேறு என எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். நீயும் நானும் ஒன்றே என்பதை உலகறியச் செய்வோம். இதுவே சரியான சமயம். ஆகையால், நீ பூலோகத்திற்குச் செல். அகத்தியருக்கு திருக்கல்யாணக் காட்சியருளிய பொதிகை மலைச்சார லில் ரிஷிகள், யோகிகள், ஞானிகள், பக்தர்கள் வசிக்கும் சிந்தவனத்தில் தவமியற்று’’ என்று மொழிந்தார்.
அவ்வாறே பார்வதி தேவியும் வாசவனூர் எனும் இத்தலத்திற்கு எழுந்தருளி நன்னீர்ச்சுனை, நந்தவனம் அமைத்து ஒரு புளிய மரத்தின் நிழலின் கீழ் சிவலிங்கம் ஸ்தாபித்தார். நன்னீரை அபிஷேகித்தும், நறுமணம் கமழும் பூக்களால் அர்ச்சித்தும், உளமுருகி ஈசனை ஆராதித்தும் கடுந்தவமியற்றினாள். ஈசனை ஒரு புளிய மரத்தின் கீழ் வைத்து பூஜித்ததால் ‘சிந்தாமணிநாதர்’ என ஐயன் பெயர் பெற்றார்.
அம்மையின் தபோவலிமை ஐயனின் உள்ளம் தொட்டது. அவர்முன் தோன்றி, ‘வேண்டும் வரம் கேள்’ என்றார் ஈசன்.
‘‘ஐயனே நாம் இருவரும் வெவ்வேறாக இல்லாது ஒன்றியே இருக்க வேண்டும்’’ என்று கோரினாள், அம்மை. ஈசனும் சட்டென்று அம்மையை இடபாகத்தில் ஏற்று, ஒரு பாதி ஆணாக, ஒரு பாதி பெண்ணாக அர்த்தநாரீஸ்வர வடிவாய் தோற்றம் அளித்தார். அத்தலத்திலேயே நிரந்தரமாய் நின்றார். தேவர்களின் தலைவன் இந்திரன் இத்தல அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டிருக்கிறான்.
ரவிவர்மன் எனும் சேர தேசத்து மன்னனின் புதல்வன் குலசேகரனுக்கு குஷ்ட நோய் உடலெல்லாம் பரவியது. தாங்க முடியாத வேதனையால் துடித்தான். ராஜ மருத்துவர்களும் தங்களால் இனி இயலாது என கைவிரித்துவிட்டனர்.
அரசரைப் பார்க்க சிவயோகி ஒருவர் வந்திருந் தார். அரசர் அவரை வீழ்ந்து வணங்கி, தம் பிள்ளையின் நோய் பற்றி கவலையுடன் கூறினார். “ஆமாம், அது விஷயமாகத்தான் நான் இங்கு வந்தேன்” என்று யோகி கூற, மகனைக் காப்பாற்றும்படி அவர் தாள் பிடித்துக் கெஞ்சினான், மன்னன்.
“நீ மருந்துகள் எதுவும் எடுத்துக் கொள்ள வேண்டாம். இத்தலத்து புண்ணிய தீர்த்தமான கும்ப புஷ்கரணியில் நீராடி வா. ஈசனின் நாமம் சொல்லி திருநீற்றை மேனி முழுதும் பூசு. நிட்சேப நதிக் கரையில் அமர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டு, ஈசனை மறவாமல் உள்ளுக்குள் அவன் நாமத்தையே உச்சரித்து வா. சரியாகிவிடும்’’ என்று மகனைப் பார்த்துச் சொன்னார் சிவயோகி.
உடல் முழுதும் திருநீரு பூசி, மனம் முழுதும் மகேசனின் நாமம் சொல்லி, கும்ப புஷ்கரணியில் மூழ்கியெழுந்தான், குலசேகரன். குஷ்ட நோய், கும்ப புஷ்கரணியில் கரைந்தது. மாமன்னனின் மகன் இன்னும் மகோன்னதமாக ஆட்சி செய்தான். கோயிலைச் சுற்றி ஊர் அமைத்து, கலை வேலைப்பாடுகளோடு கூடிய அழகிய கோயிலையும் அமைத்தான்.
புண்ணிய நதியெனப் புராணம் புகழும் நிட்சேப நதியின் வடகரையில் இக்கோயில் உள்ளது. கோயில் புறச்சுவர்கள் பெரிய கோட்டைச்சுவர் போல் இருக்கின்றன. கோயிலின் முகப்பில் உயரமான தூண்கள். நுழைவாயிலில் வடப்புறம் ஐயப்ப சுவாமி கோயில் உள்ளது. இந்தத் திருக்கோயிலின் மூலஸ்தானத்திற்கு பின்புறத்தில் மேற்குப் பிராகாரத்தில் சாஸ்தா கோயில் உள்ளது. வடப்புறம் மிகப்பெரிய, அழகிய திருக்குளம்.
திருக்குளத்தின் தென் கரையில் சிதைந்த நிலையில் உள்ள கல்வெட்டு ஒன்று பழமையின் பெருமையை பறைசாற்றுகிறது. ஆகம சாஸ்திர முறைப்படி அமையப் பெற்ற இக்கோயிலின் முன் மண்டபம், கல்யாண மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. அழகிய மேடையோடு கூடிய ஊஞ்சல் மண்டபமும், நடராஜர் சந்நதியும் அமைந்த மண்டபத்தின் பிரதான வாயிலின் தென்புறம் விநாயகர் சந்நதி உள்ளது. ஆனைமுகனை வணங்கி, வெளி பிராகாரத்தைச் சுற்றியபடி தென் பிராகாரத்திற்கு வந்தால் கோயிலின் தல விருட்சமான புளிய மரத்தைக் காணலாம்.
புறமதிலையொட்டி பல சிற்ப மண்டபங்களும், நெற்களஞ்சியமும் உள்ளன. இந்தப் பிராகாரத்தின் தென்மேற்கு மூலையில் விநாயகர் சந்நதியும், வடமேற்கு மூலையில் முருகன் சந்நதியும் உள்ளன. உள்பிராகாரத்தில் இறைவன் சந்நதிக்கு முன்னால் ஓர் அழகிய மண்டபத்தைக் காணலாம்.
இந்த மண்டபத்தின் மேற்கூரை ஒரே கல்லால் அழகிய வேலைப்பாடுடன் செதுக்கப்பட்டுள்ளது. சிற்ப வேலைப்பாடுகளோடு கூடிய தூண்கள் இக்கூரையை தாங்கி மண்டபத்திற்கு மேலும் அழகூட்டுகின்றன. மண்டபத்தின் தென் பிராகாரத்தில் நாயன்மார்கள் வரிசையாக உள்ளனர்.
கர்ப்பக் கிரகத்திற்கு வெளியே ஓர் மண்டபம் உள்ளது. இந்த மண்டபம்தான் இறைவனை வழிபட வரும் பக்தர்களின் சிந்தையைக் கவரும் இடமாகும். செப்புச் சிலை வடிவோடு கூடிய மிக அழகு வாய்ந்த அர்த்தநாரீஸ்வரர் கண்ணைக் கவரும் வண்ணம் காட்சியருள்கிறார். செப்புச் சிலை வடிவங்களில் நால்வர், சேரமான், பிருங்கி மகரிஷி, ரவிவர்மன், சந்திரசேகரர் ஆகியோர் பேரழகோடு வீற்றிருக்கின்றனர். மூலஸ்தானத்தின் மேற்கூரை, சந்தன மரக் கட்டைகளால் வேயப்பட்டுள்ளது!
இத்தலத்தில் ஆனித் திருவிழா சீரும் சிறப்பும் வாய்ந்த பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. கொடியேற் றத்துக்குப் பிறகு, பத்து தினங்கள் விழா நடைபெறுகிறது. மூன்றாம் நாள் திருவிழா அன்று பிருங்கி ரிஷிக்கு காட்சியருளும் நிகழ்ச்சி தனிச் சிறப்புடையது.
தம்பதி ஒற்றுமைக்கு இக்கோயில் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது. மனமுறிவு ஏற்பட்டு அதனால் மணமுறிவு வரை போய்விட்ட தம்பதியர் மனந்திருந்தி, மீண்டும் ஒன்று சேர்ந்து இனிய இல்லறம் காண்பது நிச்சயம் என்கிறார்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தம்பதியர் ஒற்றுமைக்கு...
» தாலி கட்டும் போது தம்பதியர் எப்படி உட்கார வேண்டும்?

» காதலர் தினத்தைக் கொண்டாடும் ஜேவிபி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum