தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காதலர் தினத்தைக் கொண்டாடும் ஜேவிபி

Go down

காதலர் தினத்தைக் கொண்டாடும் ஜேவிபி Empty காதலர் தினத்தைக் கொண்டாடும் ஜேவிபி

Post  meenu Fri Mar 01, 2013 6:07 pm

மார்க்ஸிஸ்ட் கட்சியாக தம்மைக் கூறிக்கொள்ளும் ஜேவிபி கொழும்பில் காதலர் தினத்தை கொண்டாடியுள்ளது.

ஒரு சர்வாதிகாரியின் ஆட்சியில் இளைஞர்களின் உரிமைக்காகப் போராடி, உயிர் துறந்த ஒரு பாதிரியாருக்காகவே இந்த காதலர் தினம் கொண்டாடப்படுவதாகக் கூறும் ஜேவிபி, ஆகவே அதனை முதலாளித்துவத்தின் ஒரு அம்சமாகப் பார்க்க முடியாது என்று கூறுகிறது.

இலங்கையில் தொழில் மற்றும் கல்வி வசதி இன்றி, தமது உரிமைகள் மறுக்கப்பட்ட இளைஞர்களுக்காக தாம் இந்த தினத்தை கொழும்பில் கொண்டாடுவதாக அந்தக் கட்சி கூறுகின்றது.
மருங்கன் மோகன் செவ்வி

'சொத்துக்களின் அடிப்படையில் இல்லாத காதலுக்காகத்தான் போராடுகிறோம்'

சொத்துக்களின் அடிப்படையில் இல்லாத காதலுக்காகவே ஜேவிபி போராடுவதாக அந்தக் கட்சியின் இளைஞர் அணியின் தேசியக் குழு உறுப்பினர் மருங்கன் மோகன் கூறுகிறார்.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்

மாற்று மீடியா வடிவில் இயக்க

தொழிலாளர் தினத்தை இன்று பல முதலாளிமாரும் கொண்டாடும் நிலையைப் போன்று, காதலர் தினமும் முதலாளித்துவத்தின் ஒரு கூறு என்று பார்க்கும் கருத்தும் தவறானது என்று கூறுகின்ற ஜேவிபியின் இளைஞர் அணியின் தேசியக்குழு உறுப்பினரான மருங்கன் மோகன் அவர்கள், இப்படியான தவறான கருதுகோள்களை மாற்றுவதும் தமது இந்தக் கொண்டாட்டங்களின் ஒரு நோக்கமாகும் என்றும் கூறுகிறார்.

திருமணம் மற்றும் காதல் என்பவை இன்று பணத்தின், சொத்தின் அடிப்படையில்தான் விளங்கப்படுவதாகக் கூறும் மோகன் அவர்கள், ஆகவே எதிர்காலத்தில் சாதி, இன வேற்றுமை இல்லாத, சொத்துக்களின் அடிப்படையில் அல்லாத, ஒரு உண்மையான காதலுக்காகத்தான் தாம் போராடுவதாகவும் கூறுகிறார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum