தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மீண்டும் லிங்குசாமி தயா‌ரி‌ப்‌பில் விக்ரம் பிரபு?

Go down

மீண்டும் லிங்குசாமி தயா‌ரி‌ப்‌பில் விக்ரம் பிரபு? Empty மீண்டும் லிங்குசாமி தயா‌ரி‌ப்‌பில் விக்ரம் பிரபு?

Post  ishwarya Fri Mar 08, 2013 2:11 pm

படம் இயக்குவதைவிட தயா‌ரிப்பதில் உள்ள சூட்சுமம் லிங்குசாமிக்கு கைவரப் பெற்றிருக்கிறது. இப்படியே தொடர்ந்தால் ஒரு பெ‌ரிய திறமையான தயா‌ரிப்பாளர் தமிழுலகுக்கு கிடைப்பார்.

கும்கி படத்தை தயா‌ரிக்கும் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் மீண்டும் விக்ரம் பிரபுவை வைத்து படம் தயா‌ரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. மீண்டும் என்று குறிப்பிட காரணம், கும்கியில் ஹீரோ விக்ரம் பிரபு.

எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய சரவணனுக்கு அட்வான்ஸ் தந்து தனது கைப்பிடிக்குள் வைத்திருக்கிறது திருப்பதி பிரதர்ஸ். இந்த புராஜெக்டில் ஆர்யா நடிப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால் நடிக்கவில்லை என்று ஆர்யாவே பிற்பாடு விளக்கம் தந்தார். ஆக, சரவணனின் படத்தின் ஹீரோ போஸ்டிங் இன்னும் காலியாகவே உள்ளது. இதில் விக்ரம் பிரபுவை நியமிக்க முயற்சிகள் நடக்கின்றன.

கும்கி வெளிவந்தால் விக்ரம் பிரபுக்கு மார்க்கெட் உருவாகும், அதனை அறுவடை செய்யலாம் என்பது லிங்குசாமியின் கணிப்பு. ஹிட் படத்தை தந்த இயக்குனர் என்பதால் சரவணன் இயக்கத்தில் நம்பி நடிக்கலாம் என்பது விக்ரம் பிரபு தரப்பின் எண்ணம். தயா‌ரிப்பாளர் சொன்னால் சரவணனால் மட்டும் மறுத்துக் கூறவா முடியும்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum