திருமலையில் பிரம்மோற்சவம் இன்று கோலாகல துவக்கம்
Page 1 of 1

திருமலை: திருமலை ஏழுமலையான் கோயிலில் சுவாமி வீதி உலாவின் போது நாணயங்களை வீச வேண்டாம் என தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருமலை ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் இன்று தொடங்கியது. இதையொட்டி நேற்று மாலை கோயிலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அங்குரார்ப்பணம் நடந்தது. பின்னர் சேனாதிபதி 4 மாட வீதிகளில் பவனி வந்தார். விழா குறித்து முதன்மை செயல் அலுவலர் சுப்பிரமணியம் கூறியதாவது: பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று காலை, மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் வீதி உலா வருவார்.
இரவு பெரிய சேஷ வாகனத்திலும், 16ம் தேதி காலை சின்ன சேஷ வாகனம், இரவு அன்ன வாகனம், 17ம் தேதி காலை சிம்ம வாகனம், இரவு முத்துப்பந்தல் வாகனத்தில் வீதி உலா வருவார். 22ம் தேதி காலை தங்க ரதம், இரவு குதிரை வாகனம் ஆகியவற்றில் சுவாமி வீதி உலா வருவார். 23ம் தேதி காலை வராக சுவாமி குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறும். மறுநாள் காலை சுவாமி காட்டுக்கு வேட்டைக்கு செல்லும் பார் வேட்டை உற்சவம் நடைபெறும். வீதி உலாவின் போது பக்தர்கள், சுவாமி மீது சில்லரை நாணயங்களை வீச வேண்டாம்.
இதனால் சுவாமி சிலை, நகைகள், அர்ச்சகர்கள் பாதிக்கப்படுகின்றனர். பக்தர்களின் கேலரிகள் அருகே தேவஸ்தான ஊழியர்கள் கொண்டு வரும் உண்டியலில் நாணயங்களை செலுத்தலாம். பிரம்மோற்சவம் நடைபெறும் நாட்களில் தினமும் 2 லட்சத்து 50 ஆயிரம் லட்டுகள் இருப்பு வைக்கப்பட உள்ளது. கருட சேவையன்று 4 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிபாரிசு கடிதங்களுடன் வருபவர்களுக்கு தங்கும் அறை ஒதுக்குவதை நிறுத்திவிட்டு, முதலில் வருபவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முதல் முறையாக கருட சேவையன்று 10 ஆயிரம் பக்தர்கள் வரை சுவாமி அருகில் சென்று தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சுப்பிரமணியம் கூறினார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» திருவள்ளூர் வீரராகவர் கோயில் தை பிரம்மோற்சவம் துவக்கம்
» இலங்கை இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 1 மணிக்கு கோலாகல ஒலிம்பிக் கொண்டாட்டம்..!
» திருச்சானூர் கோயிலில் இன்று பிரம்மோற்சவம்
» சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசன விழா : கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்
» திருமலையில் ரத சப்தமி விழா : மலையப்ப சுவாமியை லட்சம் பக்தர் தரிசனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum