இலங்கை இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 1 மணிக்கு கோலாகல ஒலிம்பிக் கொண்டாட்டம்..!
Page 1 of 1
இலங்கை இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 1 மணிக்கு கோலாகல ஒலிம்பிக் கொண்டாட்டம்..!
ஒலிம்பிக் தொடக்க விழா நிகழ்ச்சிகள், லண்டன் ஒலிம்பிக் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 1 மணி அளவில் ஆரம்பமாகிறது.
வண்ணமயமான தொடக்க நிகழ்ச்சியை காண மைதானத்தில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஒலிம்பிக் தொடக்க விழா மிக பிரமாண்டமாக நடக்க உள்ளது. ஆஸ்கர் விருது வென்ற டேனி பாயல், தொடக்க விழா நிகழ்ச்சிகளுக்கு இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுமார் 3 மணி நேரம் நடக்கும் இந்நிகழ்ச்சிக்கு ‘அதிசய தீவுகள்’ என பெயரிடப்பட்டுள்ளது. ஷேக்ஸ்பியரின் நாடகத்தை மையமாக கொண்டு இசை நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், பஞ்சாபி மொழியை மையமாக வைத்து டிராக் அமைத்துள்ளார். இளையராஜாவின் பாடலும் நிகழ்ச்சியில் இடம் பெறுகிறது. விழா தொடங்குவதற்கு அறிகுறியாக 27 முறை மணி ஓசை ஒலிக்கப்படும். அதைத் தொடர்ந்து 18 ஆயிரம் கலைஞர்கள், பல்வேறு சாகசங்களை நிகழ்த்தி காட்ட உள்ளனர்.
இங்கிலாந்தின் பல துறையில் பிரபலமானவர்கள் மைதானத்தில் தோன்ற உள்ளனர். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெல், இங்கிலாந்து கால்பந்து வீரர் டேவிட் பெக்காம், குத்து சண்டை வீரர் முகமது அலி உள்ளிட்ட விஐபிக்கள் கலந்துகொள்கின்றனர்.
ஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல் கிரெய்க் நடித்த ‘தி அரைவல்’ என்ற குறும்படம் திரையிடப்படுகிறது. பி.பி.சி.யால் தயாரிக்கப்பட்ட இந்த படத்தில், ஜேம்ஸ்பாண்ட் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வந்து, அப்படியே ஒலிம்பிக் மைதானத்துக்குள் பாராசூட்டில் இறங்குவார். அப்போது ஹெலிகாப்டருடன் இணைக்கப்பட்ட கயிற்றில் ஒலிம்பிக் ஜோதி எடுத்து வரப்படும். இந்த காட்சி தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் பசுமையான கிராமம்போல் மைதானத்தை மாற்றும் ‘கிரீன் அண்ட் பிளசன்ட்’ என்ற நிகழ்ச்சியும் இடம் பெறுகிறது. இதற்காக செயற்கை மழை பொழிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் முடிந்ததும் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் நாடுகளின் அணிவகுப்பு நடக்கிறது. முதன்முதலாக ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்ட கிரீசை கவுரவிக்கும் வகையில் அந்நாட்டு வீரர்கள், முதலாவதாக அணிவகுத்து வருவர். அதைத் தொடர்ந்து அகர வரிசைப்படி நாடுகளின் வீரர்கள், தங்கள் தேசியக் கொடியை ஏந்தி மைதானத்தில் வலம் வருவார்கள். போட்டியை நடத்தும் இங்கிலாந்து வீரர்கள், கடைசியாக வருவார்கள். இந்தியாவின் மூவர்ண தேசியக் கொடியை மல்யுத்த வீரர் சுஷில் குமார் ஏந்தி வருகிறார்.
ஒலிம்பிக் போட்டிகளையொட்டி லண்டன் நகர் முழுவதும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். போட்டி நடக்கும் மைதானங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» குலசேகரன்பட்டணம் தசரா விழா : இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம்
» திருமலையில் பிரம்மோற்சவம் இன்று கோலாகல துவக்கம்
» சாய்னா நெஹ்வாலுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் பாராட்டு
» இலங்கை ஒலிம்பிக் குழுவுக்கு பயிற்சியாளர் இல்லை'
» பில்லா 2 டிரெய்லர் இன்று இரவு 7 மணிக்கு ரிலீஸ்
» திருமலையில் பிரம்மோற்சவம் இன்று கோலாகல துவக்கம்
» சாய்னா நெஹ்வாலுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் பாராட்டு
» இலங்கை ஒலிம்பிக் குழுவுக்கு பயிற்சியாளர் இல்லை'
» பில்லா 2 டிரெய்லர் இன்று இரவு 7 மணிக்கு ரிலீஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum