ஞானவேல்ராஜாவின் அக்டோபர் புரட்சி
Page 1 of 1
ஞானவேல்ராஜாவின் அக்டோபர் புரட்சி
மன்னிக்கவும். ரஷ்ய புரட்சியைதான் அக்டோபர் புரட்சி என்பார்கள். அக்டோபரில் நடக்கயிருக்கும் சம்பவம் என்பதால் ஒரு பில்டப்புக்கு இந்தப் பெயர். மற்றபடி அந்த நிஜ புரட்சிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கம்யூனிஸ்டுகள் மன்னிப்பார்களாக.
தியேட்டர் கிடைக்கலை, சரியாக விற்பனையாகலை, போஸ்ட் புரடெக்சன் இன்னும் முடியலை என பல லை கள் காரணமாக அரை டஜன் பெரிய படங்கள் தங்களின் ரிலீஸ் தேதியை செப்டம்பர் அக்டோபருக்கு ஷிப்ட் செய்துள்ளன. இதனால் தமிழகத்தில் இதுவரை இல்லாத ட்ராஃபிக் ஜாம்.
தமிழும், தெலுங்கும் சேர்த்து மொத்தம் ஆயிரம் பிரிண்ட்கள் என்ற முன்னறிவிப்போடு செப்டம்பர் 28 தாண்டவம் வெளியாகிறது. தயாரிப்பு யு டிவி என்பதால் யுகே முதற்கொண்டு உப்பெலிஸ்கான் - அப்படி ஒரு நாடு இருக்கிறதா என்ன? - வரை படத்தை வெளியிடுவார்கள்.
இந்தக் கூட்டத்துக்கு முட்டி மோதி ஆசுவாசப்படுத்துவதற்குள் அக்டோபர் 12ஆம் தேதி மாற்றான் வெளியாகும். ஒரு சூர்யாவையே தாங்க முடியாது, இதில் ஒட்டிப் பிறந்த இரட்டை சூர்யா. தியேட்டர்கள் கதிகலங்கும்.
இப்போதைய கேள்வி இந்த இரு படங்களுக்குப் பிறகு என்ன...? நமக்குக் கிடைத்த தகவலின்படி மாற்றான் வெளியான ஒரு வாரம் கழித்து ஞானவேல்ராஜா தான் வாங்கிய கும்கி படத்தை வெளியிடுகிறார். சகுனிக்காக அட்டகத்தியை மாதக் கணக்கில் காக்க வைத்தவர் மாற்றான் வெளியான ஒரே வாரத்தில் கும்கியை வெளியடுவாரா?
சகுனி அவரது சொந்த தயாரிப்பு, மாற்றான் அப்படியில்லையே என்று பலரும் வாதிட்டாலும் நக்கென்னவோ இது நடக்காத காரியமாகவே தெரிகிறது. அப்படியே நடந்தால்... வேறென்ன இதையும் அக்டோபர் புரட்சியில் சேர்க்க வேண்டியதுதான்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அக்டோபர் 1ல் துப்பாக்கி ஆடியோ ரிலிஸ்!
» அக்டோபர் 6ல் ஆதிபகவன் ஆடியோ ரிலிஸ்
» அக்டோபர் 8-ல் எந்திரன்?
» அக்டோபர் 6-ம் தேதிக்கு தள்ளிப் போன வெடி!
» அக்டோபர் 7 நயன்தாரா படத்தின் ஆடியோ
» அக்டோபர் 6ல் ஆதிபகவன் ஆடியோ ரிலிஸ்
» அக்டோபர் 8-ல் எந்திரன்?
» அக்டோபர் 6-ம் தேதிக்கு தள்ளிப் போன வெடி!
» அக்டோபர் 7 நயன்தாரா படத்தின் ஆடியோ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum