பர்ஃபி - இந்தியாவுக்கான ஆஸ்கர் பரிந்துரை
Page 1 of 1
பர்ஃபி - இந்தியாவுக்கான ஆஸ்கர் பரிந்துரை
இந்த வருடம் இந்தியா சார்பில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது பிரிவுக்கு பர்ஃபி திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் இந்தியா சார்பில் சிறிந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு படங்கள் அனுப்பப்படுவதுண்டு. இந்த வருடம் பாலாஜி சக்திவேலின் வழக்கு எண், முருகதாஸின் 7 ஆம் அறிவு, அனுராக் காஷ்யபின் கேங்ஸங் ஆஃப் வாஸேபேர், வித்யாபாலன் நடித்த கஹானி, அனுராக் பாஸுவின் பர்ஃபி உள்பட 20 படங்கள் தேர்வுக்கு வந்தன. இதில் பர்ஃபியை தேர்வுக்குழு ஆஸ்கருக்கு பரிந்துரைப்பது என முடிவு செய்துள்ளது.
ரன்பீர் கபூர், ப்ரியங்கா சோப்ரா, இலியானா நடித்திருக்கும் பர்ஃபி விமர்சனரீதியாக பாராட்டை பெற்றுள்ளது. கலெக் ஷனும் அபாரம். முதல் வாரத்தில் 58 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. வாய் பேச முடியாத, காது கேளாத இளைஞனாக இதில் ரன்பீர் நடித்துள்ளார். சில காட்சிகளும், ரன்பீரின் மேனரிசமும் சாப்ளினை இமிடேட் செய்வதாக உள்ளது. இதனை அனுராக் பாஸுவே ஒப்புக் கொண்டிருக்கிறார். மாற்றுத் திறனாளிகளை வைத்து சோகத்தில் தோயத்து எடுக்காமல் அவர்களின் உலகை சுவாரஸியமாகவும், சிரிக்கிற மாதிரியும் சொல்லியிருப்பதுதான் பர்ஃபியின் வெற்றி.
பர்ஃபிக்கு ஆஸ்கர் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பர்ஃபி இந்தியா ஆஸ்கர்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாம்பே ஜெயஸ்ரீ பெயர் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை
» 85 - வது ஆஸ்கர் விழா: "ஆர்கோ' படத்துக்கு ஆஸ்கர் விருது
» சுலபமான பர்ஃபி
» நேந்திரம் பழ பர்ஃபி
» சர்ச்சையில் பர்ஃபி
» 85 - வது ஆஸ்கர் விழா: "ஆர்கோ' படத்துக்கு ஆஸ்கர் விருது
» சுலபமான பர்ஃபி
» நேந்திரம் பழ பர்ஃபி
» சர்ச்சையில் பர்ஃபி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum