நேந்திரம் பழ பர்ஃபி
Page 1 of 1
நேந்திரம் பழ பர்ஃபி
மாலை வேளையில் குழந்தைகளுக்கு இனிப்பாகவும், அதே சமயம் சத்துள்ளதாகவும் சமைத்து தர வேண்டுமெனில், அப்போது அவர்களுக்கு நேந்திரம் பழத்தை வைத்து ஒரு பர்ஃபியை செய்து தரலாம். இதனால் குழந்தைகள் நன்கு விரும்பி சாப்பிடுவர். இப்போது அந்த நேரந்திரம் பழ பர்ஃபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
நேந்திரம் பழ விழுது - 1 கப்
பால் - 1/2 கப்
தேங்காய் துருவல் - 1/2 கப்
சர்க்கரை - 1 கப்
நெய் - 1/4 கப்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய்யை ஊற்றி, தேங்காய் துருவலைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் பாலை நன்கு காய்ச்சி, குளிர வைக்க வேண்டும்.
பிறகு ஒரு வாணலியில் சர்க்கரையை போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, கம்பி பாகு வரும் வரை காய்ச்சி, அதோடு, காய்ச்சி ஆற வைத்துள்ள பால், தேங்காய் துருவல், மீதுமுள்ள நெய், நேந்திரம் பழ விழுது சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
கலவையானது ஓரளவு கெட்டியானவுடன் அதனை இறக்கி, ஒரு தட்டில் ஊற்றி, துண்டுகளாக்க வேண்டும்.
இப்போது சுவையான நேந்திரம் பழ பர்ஃபி ரெடி!!! இதன் மேல் முந்திரியை துருவி தூவி பரிமாறலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum