85 - வது ஆஸ்கர் விழா: "ஆர்கோ' படத்துக்கு ஆஸ்கர் விருது
Page 1 of 1
85 - வது ஆஸ்கர் விழா: "ஆர்கோ' படத்துக்கு ஆஸ்கர் விருது
திரைப்படங்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக உயர்வானதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் கோலாகலமாக நடந்தது. 85 ஆவது ஆஸ்கர் விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான விருதை "ஆர்கோ' வென்றுள்ளது. புதுச்சேரியைக் கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட "லைஃப் ஆஃப் பை' திரைப்படம் நான்கு விருதுகளைப் பெற்றுள்ளது.
சிறந்த திரைப்படத்துக்கான விருது பென் அஃப்ளெக் இயக்கிய "ஆர்கோ' திரைப்படத்துக்குக் கிடைத்துள்ளது. ஈரானில் சிக்கிய 6 அமெரிக்கப் பிணைக் கைதிகள் மீட்கப்படுவதுதான் இப்படத்தின் மையக் கரு.
சிறந்த திரைப்படத்துக்கான விருதை அமெரிக்க நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் எனப் பன்முகத் திறமை கொண்ட ஜாக் நிக்கல்சனுடன் இணைந்து, மிஷெல் ஒபாமா வழங்கினார்.
"ஆர்கோ' திரைப்படம் 3 விருதுகளை வென்றது. இருப்பினும், "லைஃப் ஆஃப் பை' திரைப்படம் நான்கு விருதுகளை வென்று, முதலிடம் பிடித்தது.
சிறந்த நடிகருக்கான விருது, "லிங்கன்' படத்தில் நடித்த பிரிட்டன் நடிகர் டேனியல் டே லூயிஸýக்கு வழங்கப்பட்டது.
சிறந்த நடிகைக்கான விருதை ஜெனிஃபர் லாரன்ஸ் ("சில்வர் லைனிங் பிளே புக்') பெற்றார்.
கறுப்பின மக்கள் அடிமையாக விற்கப்பட்ட காலத்தைக் கதைக்களமாகக் கொண்ட "ஜாங்கோ அன்செய்ன்டு' திரைப்படம் 2 விருதுகளைப் பெற்றது. இப்படத்தில் நடித்த கிறிஸ்டோப் வால்ட்ஸ் சிறந்த துணை நடிகருக்கான விருதையும், அசல் திரைக்கதைக்கான விருதையும் இத்திரைப்படம் பெற்றது.
சிறந்த துணை நடிகைக்கான விருதை, "லெஸ் மிஸரபிள்' படத்தில் நடித்த ஆனி ஹாத்வே பெற்றார்.
சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான விருது ஆஸ்திரேலிய படமான "ஆமௌர்' வென்றது.
லைஃப் ஆஃப் பைக்கு 4 விருதுகள்:
புதுச்சேரியில் மிருகக் காட்சி சாலை நடத்திய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன், கப்பல் விபத்தில் இருந்து தப்பி ஒரே படகில் புலியுடன் பயணிப்பதை விவரிக்கும் "லைஃப் ஆஃப் பை' திரைப்படம் நான்கு விருதுகளைப் பெற்றுள்ளது.
மொத்தம் 11 பிரிவுகளில் இத்திரைப்படம் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
மிகச் சிறந்த இயக்குநர் (ஆங் லீ), சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் ஆகிய நான்கு பிரிவுகளில் இத்திரைப்படம் விருதுகளை வென்றுள்ளது.
பாம்பே ஜெயஸ்ரீக்கு விருது இல்லை:
"லைஃப் ஆஃப் பை' திரைப்படத்தின் தொடக்கத்தில் தமிழில் ஒரு தாலாட்டுப் பாடல் இடம் பெற்றது. இதனை பாம்பே ஜெயஸ்ரீ பாடியிருந்தார். சிறந்த பாடலுக்கான விருதுக்கு இப்பாடல் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்பிரிவில் பாம்பே ஜெயஸ்ரீக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஜேம்ஸ்பாண்ட் திரைப்படமான ஸ்கை ஃபால் படத்தில் இடம்பெற்ற ஸ்கை ஃபால் பாடலைப் பாடிய பாப் பாடகி அடிலி அட்கின்ஸ், பால் எப்வொர்த் ஆகியோருக்கு சிறந்த பாடலுக்கான விருது வழங்கப்பட்டது.
ஆர்கோ
1979ஆம் ஆண்டு ஈரான் நாட்டில் நடந்த கலகத்தில் அமெரிக்கா தேவையில்லாமல் தலையிட்டதை விரும்பாத ஈரான் கலகக்காரர்கள் சிலர் தெஹ்ரானிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிட்டு அங்கு பணியில் இருக்கும் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஊழியர்களை சிறை பிடிக்கின்றனர்.
அப்படி சிறை பிடிக்கப்பட்ட அமெரிக்க ஊழியர்களில் ஆறு பேர் மட்டும் தப்பிச் சென்று அருகிலிருக்கும் கனடா நாட்டு தூதரகத்தில் அடைக்கலம் புகுந்து விடுகின்றனர். அவர்கள் கனடா நாட்டு பிரஜைகள் என்று போலியான பாஸ்போர்ட் தயாரித்து அமெரிக்க சி.ஐ.ஏ. ஆட்கள் அவர்களை கனடா தூதரகத்திலிருந்து வெளியே கொண்டு வருகின்றனர். ஆனால் ஈரான் கலகக்காரர்கள் அந்த ஆறு பேரும் தங்களிடமிருந்து தப்பிச் சென்ற அமெரிக்க ஊழியர்கள் என்பதை கண்டுபிடித்து விடுகின்றனர். ஆனால் ஈரான் கலகக்காரர்கள் தங்களைப் பிடிக்கும் முன்பே அந்த ஆறு அமெரிக்கர்களும் தந்திரமாக தப்பி அமெரிக்கா சென்று விடுகின்றனர். ஈரானியர்கள் ஏமாற்றமடைகின்றனர்.
மகிழ்ச்சியில் புதுவை மக்கள்
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2011-ம் ஆண்டு "லைஃப் ஆஃப் பை' திரைப்படம் படமாக்கப்பட்டது. ஹாலிவுட் இயக்குநர் ஆங் லீ இயக்கத்தில் புதுச்சேரி நகரிலும், கடற்பகுதியிலும் என 16 இடங்களில் சுமார் 20 நாள்கள் படப்பிடிப்பு நடைபெற்றது.
இந்த திரைப்படத்தில் புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் கணேஷ் கேசவ் (14) நடித்திருக்கிறார்.
தொடக்கத்தில், "பை' என்ற கதாப்பாத்திரம் ஏற்று நடித்த சூரஜ் சர்மாவின் வகுப்புத் தோழனாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்த கணேஷ் கேசவ், பின்னர் சூரஜுக்கான மாற்று நடிகராகத் தேர்வு செய்யப்பட்டார்.
புதுச்சேரி மற்றும் மூணாறு பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தபோது இவர் உடன் இருந்தார். இந்த படத்துக்காகப் பல்வேறு தேர்வுகளில் பங்கேற்ற பிறகே தான் தேர்வு செய்யப்பட்டதாகவும் கேசவ் குறிப்பிட்டார்.
இப்படம் ஆஸ்கர் விருது வென்றதற்கு, கணேஷ் கேசவின் தாயார் எஸ்.மாயா, மாணவரின் வகுப்பு ஆசிரியர் ஜெ.அரவிந்தன், முதல்வர் உஷா பார்த்தசாரதி ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
பள்ளிக்கு படக்குழுவினர் வரும்போதே இப்படம் ஆஸ்கர் விருது பெறும் எனப் பலரும் தெரிவித்திருந்தனர். பலரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் இப்படத்துக்கு விருது கிடைத்துள்ளது. விருதுக்குப் பிறகு இயக்குநர் ஆங் லீ புதுவை வருவார் என்று எதிர்பார்ப்பதாக பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதன் புதுச்சேரி ஒருங்கிணைப்பாளராக ஜி.எஸ்.ரவிச்சந்தர் பணியாற்றினார்.
இது குறித்து அவர் கூறியது:
ஆங் லீ, மிக திறமையான இயக்குநர். அப்படத்தின் படப்பிடிப்பின்போதே விருதுகள் பல கிடைக்கும் என எதிர்பார்த்தோம். கதைக்களமான கடல், மனிதன், விலங்கு என மூன்றுக்கும் இடையே நடக்கும் போராட்டம் என்பது மிக வித்தியாசமான கதைக்கருவாக இருந்தது.
அதைப் படமாக்கிய முறையும் மிக வித்தியாசமானதாக இருந்தது.
"லைஃப் ஆஃப் பை' திரைப்படம் வெளியானபோதே அமோக வரவேற்பு கிடைத்ததையொட்டி, அப்படத்தின் பெயரை சுற்றுலாத்துறை வளர்ச்சிக்காக அரசு சார்பில் பயன்படுத்த தொடங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரம்: "லெஸ் மிஸரபிள்'
அசல் திரைக்கதை: குவென்டின் டாரன்டினோ ("ஜாங்கோ அன்செய்ன்டு')
சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்: "ஆமௌர்'
சிறந்த அனிமேஷன் திரைப்படம்: "பிரேவ்'
சிறந்த ஒலிக் கலவை: "லெஸ் மிஸரபிள்'
சிறந்த ஆடை வடிவமைப்பு: "அன்னா கரீனா'
சிறந்த ஆவணப்படம்: "சர்ச்சிங் ஃபார் சுகர் மேன்'
சிறந்த ஆவணக் குறும்படம்: "இன்னொசன்ட்'
சிறந்த அனிமேஷன் குறும்படம்: "பேப்பர் மேன்'
சிறந்த நேரடி ஆக்ஷன் குறும்படம்: "கர்ஃப்யூ'
சிறந்த திரைப்படம்: "ஆர்கோ'
விருதுடன் இயக்குநர் பென் அஃப்ளெக்
சிறந்த தழுவல்
திரைக்கதை:
கிறிஸ் டெரியோ ("ஆர்கோ')
சிறந்த படத்தொகுப்பு:
வில்லியம் கோல்டன்பெர்க்
("ஆர்கோ')
"ஆர்கோ' படத்தில் ஒரு காட்சி
சிறந்த
இயக்குநர்:
ஆங் லீ
("லைஃப்
ஆஃப் பை')
சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ்: கில்லௌமே
ரோசெரோன், பில் வெஸ்டெனோஃபெர்,
எரிக் - ஜான் டி போர், டொனால்டு ஆர். எலியட்.
"லைஃப் ஆஃப் பை' படத்தில் ஒரு காட்சி.
சிறந்த ஒளிப்பதிவு:
கிளாடியோ மிராண்டா ("லைஃப் ஆஃப் பை')
சிறந்த இசை:
மைக்கேல் டன்னா ("லைஃப் ஆஃப் பை')
லைஃப் ஆஃப் பை திரைப்பட நடிகர் சூரஜ் சர்மாவுடன்
கணேஷ் கேசவ் (வலது).
சிறந்த நடிகை: ஜெனிஃபர் லாரென்ஸ் ("சில்வர் லைனிங்ஸ் பிளேபுக்')
சிறந்த தயாரிப்பு
வடிவமைப்பு:
ரிக் கார்ட்டர் ("லிங்கன்')
சிறந்த நடிகர்:
டேனியல்
டே லூயிஸ் ("லிங்கன்')
பெர் ஹால்பெர்க், காரன் பேக்கர்
("ஸ்கை ஃபால்')
என்.ஜே. ஓட்டோசன்
( "ஜீரோ டார்க் தர்ட்டி')
சிறந்த துணை நடிகை:
ஆனி ஹாத்வே
("லெஸ் மிஸரபிள்')
அடிலி அட்கின்ஸ், பால் எப்வொர்த் ("ஸ்கை ஃபால்')
சிறந்த துணை நடிகர்: கிறிஸ்டோப் வால்ட்ஸ்
("ஜாங்கோ அன்செய்ன்டு')
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» லைப் ஆப் பை படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது மகிழ்ச்சி: புதுவை மாணவன் பேட்டி
» நார்வே திரைப்பட விழா 2012: 5 குறும்படங்கள் தேர்வு – சென்னை இளைஞர் தயாரித்த படத்துக்கு விருது!
» லாஸ் ஏஞ்சல்சில் கோலாகல விழா: “ஹுகோ ” படத்துக்கு 5 ஆஸ்கார் விருது: சிறந்த துணை நடிகையாக அக்டாவியா ஸ்பென்சர் தேர்வு
» இருவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட ஆஸ்கர் விருது
» ஆஸ்கர் விருது – நடுவராக ஏ.ஆர்.ரஹ்மான் தேர்வு
» நார்வே திரைப்பட விழா 2012: 5 குறும்படங்கள் தேர்வு – சென்னை இளைஞர் தயாரித்த படத்துக்கு விருது!
» லாஸ் ஏஞ்சல்சில் கோலாகல விழா: “ஹுகோ ” படத்துக்கு 5 ஆஸ்கார் விருது: சிறந்த துணை நடிகையாக அக்டாவியா ஸ்பென்சர் தேர்வு
» இருவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட ஆஸ்கர் விருது
» ஆஸ்கர் விருது – நடுவராக ஏ.ஆர்.ரஹ்மான் தேர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum