திரையில் ஸ்வேதா மேனனின் பிரசவக் காட்சி
Page 1 of 1
திரையில் ஸ்வேதா மேனனின் பிரசவக் காட்சி
அரவானில் நடித்த ஸ்வேதா மேனனை தமிழில் கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தியதால் அவரின் மற்ற திறமைகள் யாருக்கும் தெரியாது. குறிப்பாக நடிப்புத் திறமை. ரஞ்சித்தின் பலேரி மாணிக்கத்திலும், சென்ற வருடம் சூப்பர்ஹிட்டான சால்ட் அண்ட் பெப்பரிலும் ஸ்வேதா மேனன் கலக்கியிருந்தார்.
FILE
கர்ப்பமாக இருந்த ஸ்வேதா மேனனை வைத்து பிளெஸ்ஸி களிமண்ணு என்ற படத்தை இயக்கி வந்தார். கர்ப்பிணி பெண்ணுக்கும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் இடையிலான உறவைப் பற்றியது களிமண்ணு. பிளெஸ்ஸியின் முதல் படம் காழ்ச்ச தொடங்கி கடைசியாக வந்த ப்ரணயம் வரை உணர்ச்சிகளின் பிழம்பாகதான் கதையை தேர்வு செய்திருக்கிறார். மனித உறவுகளும் உணர்ச்சியும்தான் அவரின் ஆதாரம். அதனால் பிழியப் பிழிய சோகம் படத்தில் அப்பியிருக்கும். அதன் உச்சமாக களிமண்ணு.
நேற்று ஸ்வேதா மேனனுக்கு மும்பையில் பிரசவம் ஆனது. ஏற்கனவே திட்டமிட்டபடி இதனை களிமண்ணுக்காக படமாக்கினார் பிளெஸ்ஸி. இந்த படப்பிடிப்பின் போது - அதாவது பிரசவத்தின் போது ஸ்வேதா மேனன் கணவர் பத்திரிகையாளர் ஸ்ரீவல்சனும் உடனிருந்தார். ஸ்வேதா மேனனின் இந்த பிரசவம் களிமண்ணு படத்திலும் வருகிறது.
டைட்டானிக் ஹீரோயின் கேட் வின்ஸ்லெட்டும் இதுபோன்ற பிரசவ காட்சியொன்றில் நடித்திருக்கிறார். அந்தப் படம் எதுவென்று எழுதுகிறவர்களுக்கு ஆயிரம் பொற்.... ஆயிரம் நன்றிகள் நல்கப்படும்.
ஸ்வேதா மேனன் பிரசவம்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கெளதம் மேனனின் ‘ஓமணப் பெண்ணே…’
» திரையில் திலீபனின் வரலாறு
» லிங்குசாமி, கௌதம் மேனனின் நீயா? நானா?
» சின்னத் திரையில் மீண்டும் மாதவன்!
» பெரிய திரையில் மீண்டும் அமலா
» திரையில் திலீபனின் வரலாறு
» லிங்குசாமி, கௌதம் மேனனின் நீயா? நானா?
» சின்னத் திரையில் மீண்டும் மாதவன்!
» பெரிய திரையில் மீண்டும் அமலா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum