ரசவடை இது நாகர்கோவில் ஸ்பெஷல்
Page 1 of 1
ரசவடை இது நாகர்கோவில் ஸ்பெஷல்
மனி த உடலுக்குத் தேவையான சக்தியைத் தரும் ஒரு பொருள் & உலகம் உணவின் மீது வைத்
திருக்கும் மதிப்பு இவ்வளவுதான். ஆனால், தமிழர்கள் நுட்பம் பொருந்தியவர்கள். உணவே மருந்து,
மருந்தே உணவு என்பதே தமிழர் கொள்கை.ரசம், தமிழரின் உணவுக் கலாசாரத்தின் முக்கிய
அம்சம். உண்ட உணவை செரிக்கச் செய்யும் அரு
மருந்து. சாற்றமுது, சாத்தமது என்றெல்லாம் நம் முன்னோர்கள் ரசத்தை குறிப்பிடுகிறார்கள்.
உணவின் இறுதியில் ரசம் ஊற்றிச் சாப்பிட வேண்டும்
என்பது செரிமானத்துக்கான உத்தி.நாகர்கோவில் என்றவுடன் இலக்கியவாதிகளுக்கு சுந்தர ராமசாமி பெயர் நினைவுக்கு வருவது போல,உணவுப் பிரியர்களுக்கு ரசவடை நினைவுக்கு வரும்.
அந்த அளவுக்கு பிரபலமான பதார்த்தம்.தயிர் வடை, சாம்பார் வடை ஓகே.அதென்ன ரசவடை..?பெரிசா எந்த வித்தியாசமும் இல்லங்க.. சாம்பாருக்குப் பதிலா
வடையை ரசத்துல ஊறவைக்கனும்.அவ்வளவுதான்... என்கிறார் வடசேரி பேருந்து நிலையத்துக்கு எதி ரி லுள்ள கௌரிசங்கர் உணவகத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்.
உண்மைதான். சாம்பாரில் உளுந்து வடையை ஊறவைப்பது போல ரசத்தில் பருப்பு வடையை ஊற வைக்கிறார்கள். ஆனால்,செய்முறையில் சில சித்து வேலைகள் உண்டு.நாகர்கோவிலில் பிளாட்பாரக் கடைகள் தொடங்கி,பெரிய உணவகங்கள் வரை கிடைக்கிறது ரசவடை.இரவோ, பகலோ, குமரிவாசிகளுக்கு ரசவடை இல்லாமல் உணவே இறங்காது என்னும் அளவுக்குஅதன் மேல் பற்றுண்டு.
கௌரிசங்கர் உணவகத்தில் குலோப் ஜாமூன்கணக்காக, ரசத்தில் மிதக்கும் வடையை ஆவிபறக்கப் பரிமாறுகிறார்கள். ரசத்தின் மேலே மிதக்கும் கொத்தமல்லித் தழை, ரசவடையின் கவர்ச்சியைக் கூட்டுகிறது. ரசத்தில் ஊறி மெத்தென்று இருக்கும் வடை,நாவு நோகாமல் வயிற்றுக்குள் இறங்குகிறது.கடலைப்பருப்பு அல்லது பட்டாணிப்பருப்பு.இதோடு 3ல் 1 பங்கு உளுந்து சேர்த்து, நைசாக அரைத்து, போண்டா கனத்துக்கு வடையைப்
பிடித்து பொரித்து எடுக்கிறார்கள். மிளகு தூக்கலாகப் போட்டுச் செய்யப்பட்ட ரசம் கொதிக்கும் தருணத்தில் இறக்கி, பொரித்தெடுத்தவடையை அதில் போட்டு அரைமணி நேரம் ஊற வைக்கிறார்கள். ரசத்தில் திளைத்து வடை உப்பி நின்றால், சாப்பிடத்தகுந்த பதம்.தயிர்வடை, சாம்பார் வடைக்கெல்லாம் குமரியில் மவுசு இல்லை. அவற்றிலிருந்து தனித்து
நிற்கும் இந்த ரசவடை, பண்டிகைக் காலங்களில் வீடுகளில் செய்யப்படுவதும் உண்டு.
கௌரிசங்கர் உணவகத்துக்கு நாகர்கோவிலில் மட்டும் நான்கு கிளைகள் உண்டு.அனைத்திலும் ரசவடைக்கு என்று தனியான வாடிக்கையாளர்கள் கூட்டம் இருக்கிறது. காலை முதல் இரவு வரை எப்போது கேட்டாலும் ஆவி பறக்கத் தருகிறார்கள். 25 வருட பாரம்பரியம் கொண்ட இந்த உணவகத்தை தொடங்கியவர் ராமசுப்பு. திரு நெல்வேலியைச் சேர்ந்த இவர், உணவக பின்புலம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ரசவடை இது நாகர்கோவில் ஸ்பெஷல்
» முந்திரிக்கொத்து இது நாகர்கோவில் ஸ்பெஷல்
» ஸ்பெஷல் வடை
» ஸ்பெஷல் வடை
» ஸ்பெஷல் கட்லெட்
» முந்திரிக்கொத்து இது நாகர்கோவில் ஸ்பெஷல்
» ஸ்பெஷல் வடை
» ஸ்பெஷல் வடை
» ஸ்பெஷல் கட்லெட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum