முந்திரிக்கொத்து இது நாகர்கோவில் ஸ்பெஷல்
Page 1 of 1

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நால் வகை நிலங்களையும் உள்ளடக்கிய குமரியின் உணவுக் கலாசாரம் தனித்தன்மையானது.குண்டு குண்டான செங்கல்பட்டு அரிசியில் சமைத்த சாதம்,
தேங்காய்ப்பாலில் வேகவைத்த காய்கறி அவியல், மிளகாய்க்கு இணையாக வெல்லம் சேர்த்த ரசம்,
செரிமானத்துக்காக இஞ்சியும் தயிரும் கலந்த புளிச்சாறு... என இலை நிறைக்கும் உணவு வகைகள் புதிதாக குமரிக்கு செல்வருக்கு வியப்பையும் மலைப்பையும் ஏற்படுத்தும்.
பிற பகுதிகளில் வழக் கொழிந்து விட்ட தமிழர்களின் பாரம்பரிய உணவுகள் இன்னும் ஜீவித்துக் கொண்டிருக்கின்றன இந்த மண்ணில்!அப்படி ஒரு பாரம்பரிய பதார்த்தம் தான் முந்திரிக்கொத்து. விருந்தினர்களை உபசரிப்பதில் தொடங்கி,மறுவீடு முடித்துச் செல்லும் மணமக்களுக்கு தரும் பலகாரக் குடம் வரை எல்லாவற்றிலும் முக்கிய இடம்பிடித்திருக்கிறது இது.
நாகர்கோவிலின் பிரதான இனிப்பகங்களில் மட்டுமின்றி, பிரத்யேகமாக சில வீடுகளிலும் கிடைக்கும் முந்திரிக்கொத்து கேரளாவுக்கும்
அனுப்பப்படுகிறது. ஓணக்கோவில் தெருவில் உள்ள தேவிகா மற்றும் அவரது சகோதரி குடும்பத்தினர்10 வருடங்களுக்கும் மேலாக குடிசைத் ªத£ழில்«ப£ல இதைத் தயாரித்து வருகிறார்கள்.
பெயர்தான் முந்திரிக்கொத்தே தவிர,இதில் கஞ்சூண்டுகூட முந்திரி இல்லை.கிட்டத்தட்ட பூரணக் கொழுக்கட்டையைநினைவூட்டுகிற செய்முறை. ஒரு கிலோ பாசிப்பருப்புக்கு ஒன்றரை கிலோ கருப்பட்டியும்,
2 தேங்காயும் தேவை. இது தவிர 100 கிராம் எள்,சிறிது ஏலக்காய்த்தூள், அரை கிலோ பச்சரிசி.பாசிப்பருப்பு, எள், தேங்காய் துருவல் மூன்றையும் தனித்தனியாக நிறம் மாறும் பதத்துக்கு வறுத்துக் கொள்ள வேண்டும்.தேவைப்பட்டால் தேங்காய் துருவலுக்கு
சிறிது எண்ணெய் விட்டுக் கொள்ளலாம்.
கருப்பட்டியில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, கையில் ஒட்டும் பதத்துக்கு கெட்டியாக பாகு காய்ச்ச வேண்டும். வறுத்த பாசிப்பருப்பை மிதமாக அரைத்து, அதில் ஏலக்காய்த்தூள், எள், தேங்காய் துருவலைக் கொட்டி, கருப்பட்டி பாகுவை ஊற்றிக் கெட்டியாக பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.பச்சரிசியை 1 மணி நேரம் ஊறவைத்து
அரைத்து, லேசாக மஞ்சள் தூள் கலந்து, உருட்டி வைத்துள்ள உருண்டைகளை இந்த மாவில் நனைத்து
எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், முந்திரிக்கொத்து ரெடி. ஆனால், இப்படி பொரிக்க தேங்காய் எண்ணெய்
பயன்படுத்தக்கூடாது. சூரியகாந்தி அல்லது நல்லெண்ணெய் உகந்தது.இனிப்பகங்களில் ஒரு கொத்து 3 ரூபாய்.ஆனால், இதை தேவிகா ரூ.2.50க்கு விற்கிறார். சிலபேர் கருப்பட்டிக்குப் பதில் சர்க்கரை கலந்து செய்கிறார்கள். சர்க்கரைமுந்திரிக்கொத்து 2 ரூபாய்க்கு கிடைக்கிறது.
& வெ.நீலகண்டன்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ரசவடை இது நாகர்கோவில் ஸ்பெஷல்
» ரசவடை இது நாகர்கோவில் ஸ்பெஷல்
» ஸ்பெஷல் வடை
» ஸ்பெஷல் வடை
» இது மத்தூர் ஸ்பெஷல் வடை
» ரசவடை இது நாகர்கோவில் ஸ்பெஷல்
» ஸ்பெஷல் வடை
» ஸ்பெஷல் வடை
» இது மத்தூர் ஸ்பெஷல் வடை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum