ஸ்பெஷல் கட்லெட்
Page 1 of 1
ஸ்பெஷல் கட்லெட்
என்னென்ன தேவை?
கேரட் துருவல் - 1 கப்,
பீட்ரூட் துருவல் - 1 கப்,
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 4,
வெங்காயம் - 2,
இஞ்சி-பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1 டேபிள்ஸ்பூன்,
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்,
கரம் மசாலா - 1 டீஸ்பூன்,
மைதா - சிறிது,
பிரெட் தூள் - சிறிது,
எண்ணெய் - தேவைக்கேற்ப,
உப்பு - தேவைக்கேற்ப,
கடலை மாவு அல்லது பொட்டுக்கடலைத் தூள் - அரை கப்.
எப்படிச் செய்வது?
கடாயில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் காய வைத்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் மிளகாய் தூள் சேர்த்து, மேலும் ஒரு நிமிடம் வதக்கி, கேரட் துருவல், பீட்ரூட் துருவல் சேர்க்கவும். நன்றாக வதங்கியதும், உருளைக்கிழங்கு சேர்த்து, மேலும் சிறிது உப்பு சேர்த்துக் கிளறவும்.
கடைசியில் கடலை மாவு அல்லது பொட்டுக்கடலை மாவை கட்டிகள் இன்றி சலித்து, கலவையில் தூவி, திரண்டு வந்ததும் இறக்கவும். இதை சின்னச் சின்ன உருண்டைகளாகவோ அல்லது விருப்பமான வடிவிலோ தட்டவும். மைதாவை தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக் கொண்டு, கட்லெட்டுகளை அதில் நனைத்து, பிரெட் தூளில் பிரட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum