ஸ்பெஷல் வடை
Page 1 of 1
ஸ்பெஷல் வடை
என்னென்ன தேவை?
பச்சரிசி, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, முழு உளுந்து, பயத்தம் பருப்பு - தலா 1 கப், எண்ணெய் - தேவைக்கேற்ப, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - தேவைக்கேற்ப, தேங்காய் - அரை மூடி, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது, காய்ந்த மிளகாய் - 4, இஞ்சி - சிறிது.
எப்படிச் செய்வது?
பயத்தம் பருப்பு தவிர மற்ற பருப்புகளை, அரிசியுடன் சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். பயத்தம் பருப்பை தனியே அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அவற்றுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும். அதில் பல், பல்லாகக் கீறிய தேங்காய், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துக் கலக்கவும். எண்ணெய் காய்ந்ததும், இந்த மாவை ஒரு கரண்டியால் எடுத்து எண்ணெயில் விடவும். வடையாகத் தட்டிப் போட வேண்டாம். இரண்டு பக்கமும் பொன்னிறமாகி, வெந்ததும், எடுக்கவும். மாவை அதிக நேரம் வைத் திருக்காமல், அரைத்த உடனேயே செய்யவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஸ்பெஷல் வடை
» இது மத்தூர் ஸ்பெஷல் வடை
» ஸ்பெஷல் பூரி
» "ஃப்ரெண்ட்ஷிப் டே" ஸ்பெஷல்!!!
» முந்திரிக்கொத்து இது நாகர்கோவில் ஸ்பெஷல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum