தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஹாலிவுட் செல்கிறதா விழித்திரு?

Go down

ஹாலிவுட் செல்கிறதா விழித்திரு? Empty ஹாலிவுட் செல்கிறதா விழித்திரு?

Post  ishwarya Thu Mar 07, 2013 11:57 am


படம் ‌ரிலீஸானால் அது சூப்பர்ஹிட் என்று காட்ட நம்மவர்கள் போடும் குட்டிக்கரணங்கள் இருக்கிறதே. லிங்குசாமி வேட்டை வெளியான போது, வேட்டையைப் பார்த்து பாலிவுட்டில் பலர் மயங்கி விழுந்ததாகவும் சுவிஸ் பேங்க் சாவியை தந்து படமெடுக்க வருமாறு ஆராத்தியுடன் அழைப்பதாகவும் பேட்டி மேல் பேட்டியளித்து வந்தார். இப்போது வேட்டை என்றாலே முகத்தை வெட்டி திருப்பிக் கொள்கிறாராம். வேட்டை உலகமகா படம், பாலிவுட்டிலேயே பலர் மயங்கினார்கள் என்று படத்துக்கு ஒரு பில்டப் தர சொன்னதுதான் அத்தனை கதைகளும்.

பாலிவுட்ல ‌ரீமேக் பண்றாங்க, ஹாலிவுட்ல கதை கேட்டாக என்பதெல்லாம் ஓடாத படத்துக்கு தரும் முட்டுகள்தான். இதையும் அப்படி எடுத்துக் கொள்வதா இல்லையா என்பதை அவரவர் முடிவுக்கு விட்டு விடுகிறோம். இனி மேட்டர்.

அவள் பெயர் தமிழரசி படத்தை இயக்கிய மீரா கதிரவன் விழித்திரு என்ற த்‌ரில்லரை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் கதையை கேட்ட ஒரு நண்பர் ஹாலிவுட்டில் இதனை படமாக்க கேட்டிருக்கிறாராம். அந்தளவு யுனிவர்சல் சப்ஜெக்டாம் கதை.

மீரா கதிரவன் இலக்கிய ப‌ரிட்சயம் உள்ளவர். மலையாளத்தில் வெளியான சில புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அவர் கதை ஹாலிவுட்டுக்குப் போனால் நமக்கும் பெருமைதான்.
விழித்திரு, மீரா கதிரவன்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum