தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகர் சுந்தர் கட்டாய திருமணத்துக்கு என்னை வற்புறுத்தவில்லை: நடிகை ரிச்சா பேட்டி

Go down

நடிகர் சுந்தர் கட்டாய திருமணத்துக்கு என்னை வற்புறுத்தவில்லை: நடிகை ரிச்சா பேட்டி Empty நடிகர் சுந்தர் கட்டாய திருமணத்துக்கு என்னை வற்புறுத்தவில்லை: நடிகை ரிச்சா பேட்டி

Post  ishwarya Sat Mar 30, 2013 12:43 pm

நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் டெல்லியை சேர்ந்தவர். இவருக்கு 26 வயது ஆகிறது. தனுசின் ‘மயக்கம்’ என்ன படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். சிம்பு ஜோடியாக ‘ஒஸ்தி’ படத்திலும் நடித்தார்.

‘மயக்கம் என்ன’ படத்தில் ரிச்சாவுடன் இணைந்து நடித்தவர் சுந்தர். படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. அடிக்கடி சந்தித்து பேசினர். ஓட்டல் விருந்துகளிலும் ஒன்றாக பங்கேற்றார்கள். இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ரிச்சா திடீரென காதலை முறித்துக் கொண்டதாக நேற்று தகவல் வெளியானது. ரிச்சாவை திருமணத்துக்கு சுந்தர் கட்டாயப்படுத்தியதாகவும் அது பிடிக்காமல் அவர் ஒதுங்கி விட்டதாகவும் தகவல் வெளியானது. இதனால் சுந்தர் மனம் உடைந்து தனது கையை கத்தியால் குத்தி கிழித்துக் கொண்டதாக நெருக்கமானவர்கள் கூறினர்.

ரிச்சாவிடம் என்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியதாகவும் செய்தி பரவியது. இதற்கு பதில் அளித்து ரிச்சா கூறியதாவது:-

என்னிடம் நடிகர் சுந்தர் திருமணத்துக்கு வற்புறுத்தியதாகவும் மறுத்தால் தற்கொலை செய்வேன் என்று அவர் மிரட்டியதாகவும் வந்துள்ள செய்திகள் அபத்தமானவை. நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள போவதில்லை. தன்னை மணந்து கொள்ளும்படி யாரும் என்னை மிரட்டவும் இல்லை. இதெல்லாம் வதந்திகள்தான். சுந்தரும் நானும் நல்ல நண்பர்கள். எனது முழு கவனமும் சினிமாவில்தான் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் சுந்தர் கூறும் போது ரிச்சாவிடம் திருமணத்துக்கு நிர்ப்பந்தம் செய்து நான் தற்கொலை மிரட்டல் விடுத்ததாக வந்த செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. ரிச்சாவுடன் கடந்த 2 1/2 மாதமாக எனக்கு தொடர்பே இல்லை. ‘மயக்கம்’ என்ன படப்பிடிப்பில் இணைந்து நடித்தோம். அப்போது நட்பு இருந்தது. எங்களுக்குள் காதல் எதுவும் இல்லை. இப்போது எங்களைப் பற்றி பரவியுள்ள செய்திகள் முற்றிலும் தவறானவை என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகை சமந்தாவுடன் விரைவில் திருமணம் நடிகர் சித்தார்த் பேட்டி
» சிறந்த நடிகர் விஷால் – சிறந்த நடிகை ரிச்சா: நார்வே தமிழ் திரைப்பட விழா விருதுகள் அறிவிப்பு
» நடிகை அஞ்சலி மீது நடிகர் சங்கத்தில் புகார்: டைரக்டர் களஞ்சியம் பேட்டி
» கட்டாய திருமணமா? - நடிகை மறுப்பு
» திருமணத்துக்கு பின் சினிமாவுக்கு முழுக்கா?- சினேகா பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum