தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சத்துமாவுக் கஞ்சி

Go down

சத்துமாவுக் கஞ்சி Empty சத்துமாவுக் கஞ்சி

Post  meenu Wed Mar 06, 2013 5:05 pm

சம்பா கோதுமை - அரை கிலோ,
முளைகட்டின கேழ்வரகு - கால் கிலோ,
பொட்டுக்கடலை - 200 கிராம்,
பாதாம் - 100 கிராம்,
ஏலக்காய் - 10 கிராம்,
பால், சர்க்கரை அல்லது மோர்,
உப்பு - தேவையான அளவு.


கேழ்வரகை சுத்தம் செய்து, 8 மணி நேரம் ஊற வைத்து, முளைகட்ட விடவும். பின், காய வைத்து, வெறும் கடாயில் இளம் சூட்டில் வறுக்கவும். சம்பா கோதுமையைத் தனியே வறுக்கவும். இவற்றுடன் மீதிப் பொருள்களைச் சேர்த்து மெஷினில் கொடுத்து அரைத்தால், சத்துமாவு ரெடி.

2 கப் தண்ணீரில், 2 டேபிள்ஸ்பூன் கஞ்சி மாவைக் கரைக்கவும். ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் கரைத்து வைத்துள்ள மாவைக் கொட்டி, ஓரளவு கெட்டியாகும் வரைக் கிளறவும்.

ஆறியதும் அதில் பால், சர்க்கரை அல்லது மோர், உப்பு சேர்த்துக் கலந்து பரிமாறவும். கஞ்சி மாவில் சோயா சேர்த்தால் கஞ்சி வேக நிறைய நேரம் பிடிக்கும். காலை நேரப் பரபரப்புக்கு அது சரி வராது என்பதால் இங்கே அதைத் தவிர்த்திருக்கிறேன்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum