தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மேத்தி - பனீர் புலாவ்

Go down

மேத்தி - பனீர் புலாவ் Empty மேத்தி - பனீர் புலாவ்

Post  meenu Wed Mar 06, 2013 12:33 pm

பாசுமதி அரிசி - 1 கப்,
வெந்தயக் கீரை - 1 கப்,
பனீர் துண்டுகள் - 200 கிராம்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
நெய் - 3 டேபிள்ஸ்பூன்,
வெங்காயம் (சதுரமாக நறுக்கியது) - 2,
தக்காளி (சாறு எடுக்கவும்) - 2,
தண்ணீர் - 4 கப்,
கொத்தமல்லி - ஒரு கொத்து.


அரிசியைக் களைந்து, போதுமான தண்ணீர் விட்டு, அரை மணி நேரம் ஊற வைத்து வடிக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, பனீரை பொன்னிறத்துக்குப் பொரித்தெடுத்து, தனியே வைக்கவும்.

3 டேபிள்ஸ்பூன் நெய்யை சூடாக்கி, அதில் வெங்காயம் சேர்த்து, லேசாக பிரவுன் நிறத்துக்கு வதக்கவும். வெந்தயக் கீரை சேர்த்து, 1 நிமிடம் வதக்கவும். தக்காளிச்சாறு சேர்த்து மேலும் 1 நிமிடம் வதக்கவும்.

ஊற வைத்த அரிசி, தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். தீயைக் குறைத்து, மூடி வைத்து வேக விடவும். பாதி வெந்ததும், பனீர் சேர்த்து மறுபடி வேக விடவும். முழுக்க வெந்ததும், கொத்தமல்லி தூவிப்பரிமாறவும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum