தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மேத்தி புலாவ்

Go down

மேத்தி புலாவ்                     Empty மேத்தி புலாவ்

Post  ishwarya Tue Feb 26, 2013 2:49 pm

பாசுமதி பொன்னி பச்சரிசி - கால் கிலோ,
வெந்தயக் கீரை - 2 கப்,
புதினா - 1 கைப்பிடி,
கொத்தமல்லி - சிறிது,
மெலிதாக நறுக்கிய வெங்காயம்- 1,
பொடியாக நறுக்கிய தக்காளி - 1,
சோம்பு - 2 டீஸ்பூன்,
பட்டை - 2,
பிரிஞ்சி இலை - 1,
இஞ்சி -பூண்டு விழுது -1டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்,
மிளகாய் பொடி - 3 டீஸ்பூன்,
கசூரி மேத்தி எனப்படுகிற உலர்ந்த வெந்தயக் கீரை - அரை டீஸ்பூன்.
கரம் மசாலா - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.


எண்ணெய் காய வைத்து, சோம்பு, பட்டை, பிரிஞ்சி இலை,இஞ்சி-பூண்டு விழுது, கசூரி மேத்தி சேர்த்துத் தாளிக்கவும். பிறகு
வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

மஞ்சள் பொடி, மிளகாய் பொடி,கரம் மசாலா சேர்த்து வதக்கியதும், புதினா, வெந்தயக் கீரை சேர்க்கவும். பிறகு தக்காளி, களைந்து வைத்துள்ள அரிசி போட்டு, 2 மடங்கு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து, பிரஷர் குக்கரில் 2 விசில் வைத்தெடுத்துப் பரிமாறவும்.

ரைஸ் குக்கரில் வைப்பதானால் ஒன்றுக்கு 3 பங்கு தண்ணீர் விடவும். கண் எரிச்சலைப் போக்க மேத்தி புலாவ் சாப்பிடலாம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum