எழுத்தாளரை மாற்றும் கே.வி.ஆனந்த்?
Page 1 of 1
எழுத்தாளரை மாற்றும் கே.வி.ஆனந்த்?
கே.வி.ஆனந்த் இயக்கிய நான்கு படங்களுக்கும் வசனம் எழுதிய இரட்டை எழுத்தாளர்கள் சுபாவுக்குப் பதில் தனது அடுத்தப் படத்தில் வேறொரு எழுத்தாளரை பயன்படுத்த கே.வி.ஆனந்த் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுபா, கே.வி.ஆனந்த் பந்தம் கே.வி.ஆனந்த் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு தொடங்கியது. விவேக் பப்ளிகேஷன்ஸ் எஸ்.பி.ராமு உங்கள் ஜுனியர் உள்பட ஏராளமான நாவல்களை வெளியிட்டு வந்தார். அதில் உங்கள் ஜுனியர் நாவல் தொடர்ந்து சுபா எழுதி வந்ததாகும். இந்த நாவல்களுக்கு அட்டைப்படம் எடுக்கும் ஸ்டில் போட்டோகிராஃபராக அறிமுகமானவர் கே.வி.ஆனந்த். ஒவ்வொரு நாவலுக்கும் விதவிதமான க்ரைம் படங்களை எடுத்துத் தருவது கே.வி.ஆனந்தின் வேலை. தமிழில் க்ரைம் நாவலுக்கு இப்படி ஆட்களை வைத்து படம் எடுத்து அட்டைப் படத்தில் பயன்படுத்தியது முதலில் விவேக் பப்ளிகேஷன்ஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டில் போட்டோகிராஃபராக இருந்த கே.வி.ஆனந்த் பிறகு சினிமாவில் நுழைந்து ஒளிப்பதிவாளரானார். படம் இயக்குவது என்று தீர்மானித்ததும் அவர் சென்றது சுபாவிடம். அதன் பிறகு நடந்தவை அனைவரும் அறிந்தது.
பல பத்தாண்டுகளாக தொடர்ந்த இந்த பந்தம் அடுத்தப் படத்தில் தொடருமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. சுபா தற்போது விஷ்ணுவர்தன் அஜீத்தை வைத்து இயக்கும் பெயரிடப்படாத படத்துக்கும், ஷங்கரின் ஐ படத்துக்கும் வசனம் எழுதி வருகின்றனர். முன்பு போல் கே.வி.ஆனந்துக்கு எக்ஸ்குளூஸிவாக நேரம் ஒதுக்க அவர்களால் இன்று இயலாது. மாற்றானின் தோல்வி இன்னொரு காரணம்.
தனது டீமை புதுப்பிக்கும் விதமாக அவர் பட்டுக்கோட்டை பிரபாகரை அணுகியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரும் விவேக் பப்ளிகேஷன்ஸில் தொடர்ந்து எழுதியது குறிப்பிடத்தக்கது. கே.வி.ஆனந்தின் அடுத்தப்பட அறிவிப்பு வருகையில் இவரா அவரா என்ற ஊசலாட்டத்தின் முடிவு தெரிந்துவிடும்.
கேவி ஆனந்த், சுபா, மாற்றான்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முக அமைப்பினை மாற்றும் புருவங்கள்.....
» தலையெழுத்தை மாற்றும் கையெழுத்து
» பெயர் மாற்றும் நடிகை
» அடிக்கடி பெயரை மாற்றும் டைரக்டர்!
» போர்க்கள சூழலை ஒரு புன்னகை மாற்றும்..
» தலையெழுத்தை மாற்றும் கையெழுத்து
» பெயர் மாற்றும் நடிகை
» அடிக்கடி பெயரை மாற்றும் டைரக்டர்!
» போர்க்கள சூழலை ஒரு புன்னகை மாற்றும்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum