தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரஜினிக்கே டாட்டா... பேரரசுக்கு விழுந்த பேரிடி

Go down

ரஜினிக்கே டாட்டா... பேரரசுக்கு விழுந்த பேரிடி Empty ரஜினிக்கே டாட்டா... பேரரசுக்கு விழுந்த பேரிடி

Post  ishwarya Mon Mar 04, 2013 6:08 pm

யார் சொல்றது உண்மைன்னு தெரியலை. பெரிய இடத்து விவகாரம் சொல்லாமலும் இருக்க முடியாது.

பேரரசு பேரரசுன்னு ஒரு இயக்குனர் இருக்கிறது தெரியும்தானே. திருப்பாச்சியும், சிவகாசியும் என்ன.. ஏதுன்னு காரணம் தெரியாமல் ஓடிய காலத்தில் கட்அவுட், ரசிகர் மன்றம் என விரலுக்கு ஓவராக வீங்கித் திரிந்தவரை அடுத்து வந்த திருப்பதி தருமபுரி, பழனி போன்ற படங்கள் குப்புறத் தள்ளி குழி பறித்தன.

இருந்தும் வீக்கம் குறையாமல் திருத்தணி படத்தில் கதை, வசனம், பாடல்கள், இயக்கம் ஆகிய திருப்பணிகளுடன் இசையையும் சேர்த்துக் கொண்டார். பரத்தின் கேரியரில் திருத்தணி மறக்க முடியாத மகத்தான தோல்வியானது.

இந்நிலையில் ரஜினிக்கே கதை வச்சிருக்கேன், பேரு செங்கோட்டை என பேரரசு மொழிந்ததாக ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டது. ஷங்கருக்கு அப்புறம் அவரைவிட பெரிய இயக்குனர் இல்லாமல் ஷங்கர் இயக்கத்திலேயே இரண்டு படங்கள் நடித்த சூப்பர் ஸ்டாருக்கு, பேரரசு வடிவில் பெரும் அவமானமா என்று தொலைபேசியிலேயே டோஸ் விட்டிருக்கிறார்கள்.

அவரோ இந்த செங்கோட்டை விவகாரம் நீங்கச் சொல்லித்தான் தெரியும், எந்த வம்பன் இப்படி பட்டாசு கொளுத்தினானோ என்று பதறி பதிலளித்திருக்கிறார்.

நாலு பாட்டு, நாலு பைட்டு, நடுவுல காமெடி மாதிரி கொஞ்சம்... இந்த ரஜினி ஃபார்முலாவுக்கு பேரரசு கதை வச்சிருக்கார்னு சொன்னதில் என்ன பெரிய தப்பிருக்கு என்பதுதான் நமக்கு புரியலை.
ரஜினி, பேரரசு, சினிமா, செய்திகள், தமிழ்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum