தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கடல் - கை கழுவினார் மணிரத்னம்

Go down

கடல் - கை கழுவினார் மணிரத்னம்  Empty கடல் - கை கழுவினார் மணிரத்னம்

Post  ishwarya Mon Mar 04, 2013 12:46 pm



கடல் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததை அடுத்து படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் மணிரத்னத்தின் அலுவலகத்தை முற்றுகையிட்டு நஷ்டஈடு தரும்படி கோஷமிட்டனர். இதற்கு மணிரத்னம் தரப்பு அறிக்கை ஒன்றை பதிலாக தந்திருக்கின்றனர். அதற்குமுன் இவர்களின் கோஷம் சரியா என்பது பற்றி பார்க்க வேண்டும்.

வியாபாரத்தில் லாபமோ, நஷ்டமோ... வியாபாரத்தில் ஈடுபடுகிறவர்கள்தான் இரண்டையும் அனுபவித்தாக வேண்டும். சினிமாவில் மட்டும் லாபம் வந்தால் விநியோகஸ்தர்கள் அனுபவிப்பார்கள், நஷ்டம் வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் நஷ்டஈடு தர வேண்டும்.

சில நேரம் படத்துக்கு செலவளித்ததைவிட குறைவான தொகைக்கு விநியோகஸ்தர்கள் வாங்குவதுண்டு. தயாரிப்பாளர் நஷ்டமடைவார். ஆனால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அப்போதெல்லாம் தயாரிப்பாளர் நஷ்டப்பட்டுவிட்டாரே லாபத்தில் சிறிதை அவருக்கு தருவோம் என எந்த விநியோகஸ்தரும் முன் வந்ததில்லை. அதேநேரம் அவர்களுக்கு நஷ்டம் வந்தால் மட்டும் தயாரிப்பாளர் பணத்தை திருப்பித்தர வேண்டும்.

இந்த அடிப்படையில்தான் கடல் படத்தை மினிமம் கியாரண்டியில் வாங்கியவர்கள் பணத்தை திரும்ப கேட்டு கோஷமிட்டனர். சரி, மணிரத்னம் தரப்பு என்ன சொல்கிறது.

கடல் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு வெளியீட்டு உரிமைகளை மெட்ராஸ் டாக்கீஸ் மார்ச் மாதம் 2012-ம் ஆண்டிலேயே ஜெமினி இண்டஸ்ட்ரிஸ் மற்றும் இமேஜிங் லிமிடெட் நிறுவனத்துக்கு மினிமம் கியாரண்டி அடிப்படையில் விற்றுவிட்டது. இந்தப் பட வெளியீட்டிற்காக ஜெமினி நிறுவனம் செய்து கொண்டிருக்கும் ஒப்பந்தங்களுக்கும் மெட்ராஸ் டாக்கீசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது சம்பந்தமாக வேறெந்த நபரையும் மெட்ராஸ் டாக்கீஸ் அணுகவில்லை.

- என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதாவது ஒப்பந்தம் போட்டவர்களிடம் நஷ்டஈடு கேளுங்க, எங்ககிட்ட ஏன் வர்றீங்க என்கிறது அறிக்கை.

நியாயம்தானே...?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum