தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கடல் பட வெளியீட்டுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை: மணிரத்னம்

Go down

கடல் பட வெளியீட்டுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை: மணிரத்னம் Empty கடல் பட வெளியீட்டுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை: மணிரத்னம்

Post  ishwarya Fri Mar 22, 2013 5:19 pm



கடல் படத்தின் வெளியீட்டு உரிமையை வேறு நிறுவனத்துக்கு விற்று விட்டதால் வெளியீட்டிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என இயக்குநர் மணிரத்னம் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

அண்மையில் வெளியான கடல் திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு வெளியீட்டு உரிமையை 2012 மார்ச் மாதம் ஜெமினி இன்டஸ்டரீஸ் மற்றும் இமேஜிங் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு (மினிமம் கேரண்டி) குறைந்தபட்ட உத்தரவாத அடிப்படையில் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் விற்றுவிட்டது.

இப்படத்தின் வெளியீட்டிற்காக ஜெமினி நிறுவனம் விநியோகஸ்தர்களிடம் செய்திருக்கும் ஒப்பந்தத்துக்கும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடல் திரைப்படம் மக்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதையொட்டி இப்படத்தை வெளியிட்ட அனைவருக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக திரைப்பட விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum