தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஜய்யும் என்னோட தம்பிதான் - பவர் ஸ்டார்

Go down

விஜய்யும் என்னோட தம்பிதான் - பவர் ஸ்டார் Empty விஜய்யும் என்னோட தம்பிதான் - பவர் ஸ்டார்

Post  ishwarya Mon Mar 04, 2013 12:25 pm

நேற்று மாலை சென்னை தேவி திரையரங்கில் பி.டி.செல்வகுமாரின் ஒன்பதுல குரு படத்தின் இசை வெளியீட்டு விழா. சிறப்பு விருந்தினர் விஜய். கே.எஸ்.ரவிக்குமார், சீனு ராமசாமி, சமுத்திரக்கனி என்று எங்கெங்கு காணினும் திரையுலக பிரபலங்கள். இவர்களையெல்லாம் தூக்கி சாப்பிட்டவர் பவர் ஸ்டார் சீனிவாசன்.
FILE

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்துக்குப் பிறகு இவரின் அலும்பு தாங்கவில்லை. போகிற வருகிறவர்களையெல்லாம் தம்பி என்று சொந்தம் கொண்டாடுகிறவர் நேற்றைய விழாவில், விஜய் எல்லோருக்கும் இளைய தளபதி எனக்கு மட்டும் இளைய தம்பி என்று வத்திக்குச்சியை பற்ற வைத்தார்.

வினய், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ் நடித்திருக்கும் ஒன்பதுல குருவில் ஒரேயொரு பாடலுக்கு ஆட சீனிவாசனை பயன்படுத்திக் கொண்டார் பி.டி.செல்வகுமார். ஹீரோயின் லட்சுமி ராயுடன் ஆட்டம் என்றதும் காரை கிளப்பி ஷுட்டிங் ஸ்பாட் வந்தவர் நேற்று அப்படியே பிளேட்டை திருப்பிப் போட்டார்.

ஒரு பாடலுக்கு நடனமான்னு யோசிச்சேன். அப்புறம்தான் படத்தை இயக்குற பி.டி.செல்வகுமார் விஜய்யோட பிஆர்ஓ ன்னு சொன்னாங்க. விஜய்னு சொன்னதுமே ஓடியாந்திட்டேன் என்றார்.

கையை ஆட்டறது, ரசிகர்களுக்கு சிக்னல் தர்றது என்று சீனிவாசனின் நேற்றைய சில்மிஷங்கள் கொஞ்சம் ஓவர். எல்லாவற்றையும் சகிக்கலாம் காசு கொடுத்து ஓட்டி வந்தவர்கள் செய்த அலம்பல்தான் நாராசம்.

இப்படிப்பட்டவர்களை எதுக்கு விழாவுக்கு கூப்பிடுறாங்க... தெரியலையே.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum