தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மார்ச் 15 பரதேசி ரிலீஸ்

Go down

மார்ச் 15 பரதேசி ரிலீஸ் Empty மார்ச் 15 பரதேசி ரிலீஸ்

Post  ishwarya Sat Mar 02, 2013 5:48 pm

பாலாவின் பரதேசி வரும் மார்ச் 15 ஆம் தேதி வெளியாகிறது.


பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் பரதேசி ரெட் டீ நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ரெட் டீ 1930 களில் வாழ்ந்த தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை பற்றியது. அதர்வா, வேதிகா, தன்ஷிகா நடிப்பில் இதனை பாலா படமாக்கியிருக்கிறார். இசை ஜி.வி.பிரகாஷ். படத்தைப் பார்த்த பாலுமகேந்திரா, அனுராக் காஷ்யப் இருவரும் இதுதான் பாலாவின் படங்களிலேயே சிறந்தது என தெரிவித்துள்ளனர்.

உலகத்தரம் வாய்ந்த பரதேசி தமிழகத்தில் மட்டும் தங்கிவிடக் கூடாது என்பதற்காக படத்தை இந்தி, ஆங்கில சப் டைட்டிலுடன் வடஇந்தியாவில் தனது ஃபேன்டம் நிறுவம் சார்பில் அனுராக் காஷ்யப் வெளியிடுகிறார். மேலும் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கும் பரதேசி அனுப்பப்படுகிறது. இந்த வேலைகளின் காரணமாக படம் எப்போது வெளியாகும் என்பது தெரியாமலிருந்தது.

இந்நிலையில் வரும் மார்ச் மாதம் 15 ஆம் தேதி பரதேசி வெளியாவதாக படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். சினிமா ஆர்வலர்களை இந்தச் செய்தி மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum