தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டில்லி சம்பவம் - மூவர் குற்றச்சாட்டுக்களை மறுக்கின்றனர்

Go down

டில்லி சம்பவம் - மூவர் குற்றச்சாட்டுக்களை மறுக்கின்றனர் Empty டில்லி சம்பவம் - மூவர் குற்றச்சாட்டுக்களை மறுக்கின்றனர்

Post  meenu Sat Mar 02, 2013 1:38 pm

புது டெல்லி பாலியல் வல்லுறவு சம்பவம் தொடர்பாக கைது
செய்யப்பட்டுள்ள ஆறு பேரில் மூன்று பேர் தம்மீதான குற்றச்சாட்டுக்களை
மறுப்பார்கள் என்று அவர்களுக்காக வாதாட முன்வந்துள்ள வழக்கறிஞர்
தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் டில்லியில் 23 வயதான மாணவி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கியது.

குற்றம் சுமத்ததப்பட்டுள்ள ஐந்து பேர் திங்களன்று
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் இருவர் தாம் அரசு தரப்பு
சாட்சியாக மாற முன்வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் வியாழக்கிழமை
நடக்கவுள்ளது. இந்த வழக்கோடு தொடர்புடைய ஆறாம் நபர் சட்டப்படி மேஜராகவில்லை
என்று கூறப்படுகிறது. அவர் வயதுகுறைந்தவர் என்பது நிருபணமானால்,
சிறார்களுக்கான நீதிமன்றத்தில் அவர் மீதான வழக்கு நடக்கும்.

இவ்வழக்கு விசாரணையின் போது ஊடகங்கள் அனுமதிக்கப்படாது என்று நீதிபதி ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum