தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வரூபம் தடை குறித்த தீர்ப்பு ஒத்திவைப்பு

Go down

விஸ்வரூபம் தடை குறித்த தீர்ப்பு ஒத்திவைப்பு Empty விஸ்வரூபம் தடை குறித்த தீர்ப்பு ஒத்திவைப்பு

Post  meenu Sat Mar 02, 2013 1:20 pm

நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தின் மீது
விதிக்கப்பட்டுள்ள இரு வாரத்தடை குறித்த தீர்ப்பினை சென்னை உயர்நீதிமன்றம்
மேலும் ஒரு நாள் தள்ளி வைத்திருக்கிறது.

திரைப்படத் தயாரிப்பில் செலவழிக்கப்பட்டிருக்கும்
தொகையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும், அதேநேரம் நாட்டின்
ஒற்றுமையும் காக்கப்படவேண்டும் சட்டம் ஒழுங்கும் பேணப்பட வேண்டும், எனவே
திரைப்படத்தை வெளியிடுவது குறித்து கமல்ஹாசன் தரப்பினர் தமிழக அரசுடன் பேசி
சுமுகத் தீர்வுகாண வேண்டும் என நீதிபதி வெங்கட்ராமன்
அறிவுறுத்தியிருக்கிறார்.

விஸ்வரூபம்
முஸ்லிம்களை இழிவுபடுத்துவதாகக் குறை கூறி பல்வேறு அமைப்புக்கள்
ஆர்ப்பாட்டங்களில் இறங்க, சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி கடந்த ஜனவரி 25
அன்று வெளியாகவிருந்த அத்திரைப்படத்திற்கு தமிழக அரசு விதித்த இருவாரத்
தடையினை எதிர்த்து கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

நீதிபதி வெங்கட்ராமன் வாதப் பிரதிவாதங்களைக்
கேட்டபின், தானே திரைப்படத்தைப் பார்த்துவிட்டு தீர்ப்பளிப்பதாகவும், ஜனவரி
28ஆம் நாள்வரை அரசின் தடை தொடரட்டும் எனவும் கூறியிருந்தார்.

கடந்த சனிக்கிழமை அவர் முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் கமல்ஹாசன் தரப்பினருடன் திரைப்படத்தையும் பார்த்தார்.

திங்களன்று தீர்ப்பு வெளியாகும் என்று பலத்த
எதிர்பார்ப்பிருந்தது. அமெரிக்கா சென்றிருந்த கமலும் அதிகாலை சென்னை
திரும்பியிருக்கிறார்.

மேலும் விஸ்வரூபம் படத்தைத் திரையிட மாவட்ட
ஆட்சியர்களும் சென்னை மாநகர காவல்துறை ஆணையரும் பிறப்பித்த தடை உத்தரவுகளை
நீக்கக்கோரும் புதிய மனு ஒன்று உயர்நீதிமன்றத்தில் திங்களன்று தாக்கல்
செய்யப்பட்டது.

இப்பின்னணியில் உயர்நீதிமன்ற வளாகத்திற்கும்,
கமல்ஹாசனின் வீட்டிற்கும், விஸ்வரூபம் திரைப்படம் வெளியாகவிருக்கும்
திரையரங்குகளுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டன.

அத்தகைய பரபரப்பான சூழலில் திங்கள் காலை நீதிபதி வெங்கட்ராமன் தலமையிலான நீதிமன்றம் கூடியது.

ஆனால் அரசுடன் கமல் தரப்பு பேசவேண்டும் எனக்கூறி தீர்ப்பினை ஒத்திவைப்பதாக நீதிபதி கூறினார்.

தடையாணைகளை நீக்கவேண்டுமெனக்கோரும் கமல்ஹாசன்
தரப்பு மனுவும் செவ்வாயன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும்
நீதிபதி வெங்கட்ராமன் தெரிவித்தார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum