புதிய தலைமை நீதிபதிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
Page 1 of 1

நீதிபதிகள் விலகிச் சென்றதன் மூலம் அரசாங்கத்துக்கு நட்டத்தை ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டி புதிய தலைமை நீதிபதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்று பிற்போடப்பட்டுள்ளது.
நாகானந்த கொடித்துவக்கு என்னும் சட்டத்தரணியினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இலங்கை உச்சநீதிமன்றத்தில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, இந்த வழக்கில் தாம் சம்பந்தப்பட்டிருப்பதால், தாம் அதனை விசாரணை செய்ய முடியாது என்று தலைமை நீதிபதி மொஹான் பீரிஸ் மற்றும் நீதிபதி சிறிபவன் ஆகியோர் அறிவித்தனர்.
அதன் பின்னர், அந்த மனு நாளை புதிய நீதிபதிகளின் கீழ் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளதாக வழக்கை தாக்கல் செய்த நாகானந்த கொடித்துவக்கு கூறியுள்ளார்.
சுங்க வரி ஏய்ப்பு தொடர்பாக ஒரு தனியார் நிறுவனத்துக்கு எதிரான வழக்கை, தற்போதைய தலைமை நீதிபதியான மொஹான் பீரிஸ் அவர்கள், தான் சட்ட மா அதிபராக இருந்தபோது தவறான முறையில் வாபஸ் பெற்றதாகவும் இந்த மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது என்று வழக்கை தாக்கல் செய்தவர் கூறியுள்ளார்.
இதன் மூலம் தற்போதைய தலைமை நீதிபதி இலங்கை அரசியலமைப்பை மீறியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» புதிய தலைமை நீதிபதிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது
» மொஹான் பீரிஸுக்கு எதிரான வழக்கு மீண்டும் தள்ளுபடி
» குஷ்பு மீது செருப்பு வீச்சு வழக்கு ஒத்திவைப்பு
» குஷ்பு கார்மீது முட்டை வீசிய வழக்கு ஒத்திவைப்பு
» சஸ்பெண்ட் குறித்த தேமுதிக எம்எல்ஏக்கள் வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum