'பாடசாலை அதிபர்களுக்கு இராணுவ தரங்கள்'
Page 1 of 1
'பாடசாலை அதிபர்களுக்கு இராணுவ தரங்கள்'
இலங்கையில் பாடசாலை அதிபர்களுக்கு படை அணிப் பயிற்சி வழங்கி இராணுவ நிலையிலான தரங்களை வழங்கும் நடைமுறைக்கு ஆசிரியர் தொழிற் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
பாடசாலைகளில் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகளை பேணும் வகையிலேயே இந்த நடவடிக்கை என்று அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தாலும் இதனை தாம் பாடசாலை நிர்வாகத்தில் இராணுவ தலையீடாகவே தாம் கருதுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் கூறுகின்றது.
நாட்டிலுள்ள அரசாங்க பாடசாலைகளில் 9000 அதிபர்கள் சேவையிலுள்ளார்கள் என்றும் இவர்களில் சுமார் 4000 அதிபர்கள் எதிர்வரும் 4ம் திகதி தொடக்கம் படை அணிப் பயிற்சி தலைமையகத்தில் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பயிற்சியின் பின்னர் லெப்டினன்ட், மேஜர் மற்றும் இராணுவ நிலையிலான தரங்கள் வழங்கப்படுவது பாடசாலை நிர்வாகத்தில் இராணுவ தலையீடு என்பதுடன் பாடசாலை முறைமையின் சுதந்திரத்திற்கும் பாரிய அடி என்று கூறுகின்றார்.
ஏற்கனவே தலைநகர் கொழும்பிலுள்ள முன்னணி பாடசாலை அதிபர்கள் 23 பேர் இந்த பயிற்சி பெற்று சீருடையில் லெப்டினன்ட் தர இராணுவ நிலையுடன் கடமையாற்றுகின்றார்கள் என்றும் அவர் தெரிவிக்கின்றார்.
வடக்கு-கிழக்கில் இராணுவமயமாக்கலை நீக்கி இயல்பு நிலையை ஏறப்படுத்துமாறு கோரிக்கைகள் வலியுறத்தப்பட்டு வரும் இவ்வேளையில் அதிபர்களை இராணுவ சேவையுடன் தொடர்புபடுத்தும் இந்த நடவடிக்கையானது முழு நாட்டையும் இராணுவ மயமாக்கும் செயலாகவே கருத வேண்டியுள்ளது என்றும் அவர் கூறுகின்றார்.
இந்த விடயம் தொடர்பாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் கருத்தைப் பெற முயன்ற போதிலும் தொடர்புகள் கிடைக்கவில்லை.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இலங்கை இராணுவ அறிக்கை குறித்து அமெரிக்கா விசனம்'
» அமெரிக்க ஐக்கிய நாடு இராணுவ இயந்திரமும் அரசியலும்
» ‘சிங்கள ராணுவத்தினருக்கு பயிற்சி’ இராணுவ முகாம் முற்றுகை! காணொளி இணைப்பு
» போர்க் குற்றம்: சானல் 4-வுக்கு இராணுவ நீதிமன்றம் பதில்
» செக்கட்ரிக்கு முத்தமிட்ட பாடசாலை அதிபர்! (படங்கள் இணைப்பு)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum