‘சிங்கள ராணுவத்தினருக்கு பயிற்சி’ இராணுவ முகாம் முற்றுகை! காணொளி இணைப்பு
Page 1 of 1

நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த வெலிங்டனில் ராணுவ பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு ராணுவ தொழில்நுட்ப மேம்பாடு குறித்த 3 நாள் கருத்தரங்கு நடைபெறுவதாக இருந்தது. இந்த கருத்தரங்கில் பங்கேற்க இலங்கையை சேர்ந்த 4 ராணுவ உயர் அலுவலர்கள் உட்பட 10 நாடுகளை சேர்ந்த 25 ராணுவ உயர் அலுவலர்கள் நேற்று முன்தினம் மாலை குன்னூர் வந்தனர். அவர்கள் அங்குள்ள விடுதியில் தங்கவைக்கப்பட்டனர். நாளை வரை கருத்தரங்கு நடைபெறுவதாக இருந்தது.
இதுகுறித்த தகவல் தெரியவந்ததும், இலங்கை ராணுவ உயர் அலுவலர்கள் உடனடியாக திருப்பி அனுப்ப கோரி, குன்னூரில் 16-07-2012 காலை 10 மணியளவில் பெரியார் தி.க. பொது செயலர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் முற்றுகை போராட்டம் நடந்தது. போராட்டம் நடத்திய பெரியார் தி.க. தொண்டர்கள் 60 கைது செய்யப்பட்டனர். போராட்டம் காரணமாக, குன்னூர், வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி, கோவை ரெட்பீல்ட் ராணுவ பட்டாலியன், மண்டல கடவு சீட்டு (பாஸ்போர்ட்) அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இதற்கிடையே, வெலிங்டனில் திட்டமிட்டபடி நேற்று முன்தினம் கருத்தரங்கு நடந்தது. இதில் இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். இதற்கு முதல்வர் ஜெயலலிதா உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். தமிழக அரசியல் கட்சி தலைவர்களின் எதிர்ப்பு, போராட்டங்கள் காரணமாக, வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் கருத்தரங்கு, நேற்று திடீரென நிறுத்தப்பட்டது. நேற்று அதிகாலை 5.50 மணிக்கு 10 நாட்டு ராணுவ அதிகாரிகளும், 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் குன்னூரில் இருந்து கோவை விமான நிலையம் அழைத்து செல்லப்பட்டனர். அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர். அங்கிருந்து உத்தரகாண்ட்டுக்கு செல்லும் அவர்கள் அங்கு பயிற்சி மற்றும் கருத்தரங்கில் பங்கேற்க உள்ளதாக தெரியவருகிறது.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» தொப்பிக்கலயில் பாரம்பரிய பூங்கா மற்றும் இராணுவ ஞாபகார்த்த தூபியைத் திறந்துவைத்தார் பாதுகாப்புச் செயலர் (படங்கள் இணைப்பு)
» உலகின் முதலாவது பாலியல் பள்ளி! காணொளி இணைப்பு
» கண் விழியே இப்போது கணணி மவுஸ்! காணொளி இணைப்பு

» சர்க்கரையின் அளவை லென்ஸ் மூலம் அறியலாம்… காணொளி இணைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum