இலங்கை இராணுவ அறிக்கை குறித்து அமெரிக்கா விசனம்'
Page 1 of 1

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் எவரும் காணாமல் போகவில்லை என்று இலங்கை இராணுவ உள்ளக விசாரணை அறிக்கை கூறியிருப்பது குறித்து அமெரிக்கா மிகுந்த விசனம் அடைந்திருப்பதாக இலங்கை வந்துள்ள அமெரிக்க தூதுக்குழுவினர் தெரிவித்தாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் கடந்த வருடம் ஐநா மனித உரிமை பேரவையின் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் குறித்து இலங்கை அரசாங்கம் எடுத்திருக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக இலங்கை வந்துள்ள மூன்று உயர் அதிகாரிகள் அடங்கிய அமெரிக்க தூதுக்குழுவை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்திருக்கிறார்கள்.
அது குறித்துக் கூறுகையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐநா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்ட எந்தவொரு விடயத்தையும் இலங்கை நிறைவேற்றவில்லை என்பது குறித்து தாம் அமெரிக்க குழுவிடம் விபரித்ததாக கூறிய சுமந்திரன் அவர்கள் இலங்கை இராணுவத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் பொதுமக்கள் எவரும் காணாமல் போகவில்லை என்று கூறப்பட்டிருப்பது குறித்து அமெரிக்க தூதுக்குழுவினர் மிகுந்த விசனம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் இலங்கை நல்லிணக்க ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட பல விடயங்களைக் கூட இலங்கை நிறைவேற்றவில்லை என்றும் தாம் அமெரிக்க குழுவுக்கு விளக்கியதாகவும் அவர் கூறினார்

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இலங்கையில் மதச் சுதந்திரம் குறித்து அமெரிக்கா கவலை
» நாங்கள் சொல்வதை இலங்கை கேட்டேயாக வேண்டும் - அமெரிக்கா
» இலங்கை மீது புதிய தீர்மானம் கொண்டுவரப்படும்: அமெரிக்கா
» இலங்கை அரசின் சதி - ஆர்.கே.செல்வமணி எச்சரிக்கை அறிக்கை
» முக்கோண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: இலங்கை அணியில் மஹ்ரூப், சானக்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum