தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

போர்க் குற்றம்: சானல் 4-வுக்கு இராணுவ நீதிமன்றம் பதில்

Go down

போர்க் குற்றம்: சானல் 4-வுக்கு இராணுவ நீதிமன்றம் பதில் Empty போர்க் குற்றம்: சானல் 4-வுக்கு இராணுவ நீதிமன்றம் பதில்

Post  meenu Fri Mar 01, 2013 5:49 pm

இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுக்கள் குறித்து லண்டனிலிருந்து ஒளிபரப்பாகும் சானல் 4 தொலைக்கட்சி வெளியிட்ட நிகழ்ச்சி குறித்து இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணையம் , ராணுவம் இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று அளித்த பரிந்துரையை அடுத்து, இலங்கை ராணுவத்தால் நியமிக்கப்பட்ட ராணுவ நீதிமன்றம் இன்று தனது அறிக்கையை ராணுவ தளபதி லெப்டினண்ட் ஜெனெரல் ஜகத் ஜயசூர்யாவிடம் சமர்ப்பித்துள்ளது.

சானல் 4 தொலைக்காட்சியின் கொலைக்களங்கள் என்ற நிகழ்ச்சியில் வெளியான தகவல்களில், போரின் போது குண்டு வீச்சால் ஏற்பட்ட பொதுமக்களின் உயிர்ச்சேதங்கள் குறித்த பகுதிக்கு மட்டும் பதிலளித்திருக்கும் இந்த ராணுவ நீதிமன்ற அறிக்கை, அந்தக் குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது.
தொடர்புடைய விடயங்கள்

துஷ்பிரயோகம்,
போர்,
கொலை,
மக்கள் விடுதலைக் கூட்டணி,
மஹிந்த ராஜபக்ஷ,
இலங்கை சுதந்திரக் கட்சி

இறுதி கட்டப்போரை மனித நேய நடவடிக்கை என்று அரசு வர்ணித்த சொற்றொடரைப் பயன்படுத்தும் இந்த ராணுவ நீதிமன்றம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிறப்பித்த 'ஒரு சிவிலியன் கூட கொல்லப்படக்கூடாது' என்ற உத்தரவை இலங்கை ராணுவம் எல்லாக் கட்டங்களிலும் ஏற்றுக்கொண்டு செயல்பட்டது என்று கூறியுள்ளது.

விடுதலைப் புலிகள், துப்பாக்கிச் சூடற்ற பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து சுட்ட போதும் கூட, இலங்கைப் படையினர், திரும்ப அந்தப் பகுதிகளுக்குள் குண்டு வீசவில்லை என்றும் இந்த நீதிமன்றம் கூறியது.
'மக்கள் மீது குண்டு வீசவில்லை': இராணுவம்
சரணடைந்த விடுதலைப் புலிகளை படையினர் சுட்டுக்கொன்றதாக சானல்4 வெளியிட்ட காட்சி ஒன்று

சரணடைந்த விடுதலைப் புலிகளை படையினர் சுட்டுக்கொன்றதாக சானல்4 வெளியிட்ட காட்சி ஒன்று.

இந்த குண்டுத் தாக்குதலற்ற பகுதிகள் என்று வரையறுக்கப்பட்ட பகுதிகளுக்கு மேல் இன்னும் ஒரு 500 மீட்டர் தூரம் வரை , இராணுவத் தளபதிகள் துப்பாக்கிச் சூடற்ற பகுதிகளாக விஸ்தரித்துக் கொண்டனர் என்றும் அது கூறுகிறது.

சர்வதேச மனித நேய சட்டங்களையும், போர்ச் சட்டங்களையும் , போரின் எல்லா கட்டங்களிலும் அனுசரித்த ஒரு கட்டுப்பாடான ராணுவமாகவே இலங்கை ராணுவம் இருந்திருக்கிறது என்றும் இந்த ராணுவ நீதிமன்றம் கூறியது.

சிவிலியன் உயிரிழப்புகள் எல்லாம், விடுதலைப்புலிகளின் சட்டவிரோதச் செயல்களாலேயே நிகழ்ந்ததாக அது கூறியது.

இலங்கை ராணுவத்துக்காகப் பேசவல்ல அதிகாரி பிரிகேடியர் ருவான் வணிகசூரிய, தமிழோசைக்கு கருத்து தெரிவிக்கையில் இந்த நீதிமன்றம் தனது இரண்டாவது பகுதியில் , சானல் 4 தொலைக்காட்சி எழுப்பிய மற்றுமொரு பிரச்சினையை, அதாவது சரணடைந்த விடுதலைப்புலிகள் விசாரணையின்றி ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டை பரிசீலித்து தீர்ப்பளிக்கும் என்றார்.

ராணுவ நீதிமன்றம் இன்னும் அதை பரிசீலித்துக்கொண்டிருக்கிறது. அது குறித்த அறிக்கை பின்னர் தனியாக சமர்ப்பிக்கப்படும் என்றார் பிரிகேடியர்.
சானல் 4 பதில்
பிரிட்டனிலிருந்து ஒளிப்பரப்பாகும் சானல் 4 தொலைக்காட்சியின் தலைமையகம்

பிரிட்டனிலிருந்து ஒளிப்பரப்பாகும் சானல் 4 தொலைக்காட்சியின் தலைமையகம்

ராணுவ நீதிமன்றத்தின் இந்த அறிக்கை பற்றி சானல் 4 தொலைக்காட்சியின் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி தயாரிப்பாளர் கேலம் மக்ரேயிடம் தமிழோசை கேட்டபோது, 'இதுபோல குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தங்களைத் தாங்களே விசாரித்துக்கொண்டு தங்களை நிரபராதிகளாக அறிவித்துக்கொள்ளும் வரலாறு இங்கே இருக்கிறது. இதில் ஒன்றும் ஆச்சரியம் ஏதும் இல்லை. இது புதிதாக எதையும் சொல்லவில்லை. எங்களிடம் யாரும் பேசவில்லை, யாரும் எங்களை கலந்தாலோசிக்கவில்லை' என்று அவர் கூறினார்.

'இலங்கை ராணுவம் குண்டுத்தாக்குதல் நடக்கக்கூடாத பகுதி என்று அறிவித்த பகுதிகளிலும் குண்டு தாக்குதல்களை நடத்தியது. அவர்கள் இந்த குண்டுத் தாக்குதலற்ற பகுதிகளாக அறிவிக்கப்பட்டுபகுதிகளை இலக்கு வைத்தார்கள். அவர்கள் பலரை கொன்று குவித்தனர். உண்மைகள் தெளிவாக இருக்கின்றன. இது ராணுவம் தன்னைத்தானே விசாரித்து, தன்னை நிரபராதி என்று முடிவு கட்டும் மற்றுமொரு விசாரணை. இதில் எதையும் மாற்றாது' என்றார் கேலம் மக்ரே.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum