மீண்டும் தீர்மானம் கொண்டுவருவோம்- அமெரிக்கா
Page 1 of 1

ஐ நா மனித உரிமைப் பேரவையின் வருடாந்திர மாநாட்டில் அமெரிக்காவின் நிலைப்பாடு எப்படியாக இருக்கும் என்பதை சர்வதேச நிறுவனங்களுக்கான அமெரிக்காவின் துணைச் செயலர் எஸ்தர் பிரிம்மர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
ஜெனிவாவில் உள்ள மனித உரிமை பேரவையின் இந்த நடப்பு அமர்வில் துவக்க உரையாற்றிய அவர், சிரியா, இஸ்ரேல் மற்றும் வட கொரியாவில் நிலவும் மனித உரிமைகள் சூழல் குறித்துக் கவலை வெளியிட்டார். இலங்கை அரசு தான் அமைத்த படிப்பினைகள் மற்றும் ஆணைக் குழுவின் பரிந்துரைகளைக் கூட முழுமையாக அமல்படுத்தவில்லை என்று கூறிய அவர் இந்த ஆண்டு அமெரிக்கா மீண்டும் ஒரு தீர்மானத்தை முன்மொழியும் என்றார்.
“கடந்த ஆண்டு மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானமானது, இலங்கையில் இருக்கும் சிவில் உரிமைக் குழுக்கள் களத்தில் தமது பணிகளை முன்னேடுக்க உத்வேகமளித்தது. இந்த ஆண்டும் அமெரிக்கா மற்றொரு தீர்மானத்தை இந்த சபையில் முன்மொழியவுள்ளது. இலங்கையில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து சர்வதேச சமூகம் கண்காணிக்கிறது என்பதை உறுதிப்படுத்தவும் நல்லிணக்கப்பாட்டை காண்பது மற்றும் பொறுப்புக் கூறல் விடயம் தொடர்பாக உதவிகளை வழங்குவது தொடர்பிலும் இந்த தீர்மானம் இருக்கும். இந்த தீர்மானம் இலங்கை அரசுடன் இணைந்த ஒரு கூட்டு முயற்சியாக இருக்கும் என்று அமெரிக்கா நம்புகிறது”என்றார் சர்வதேச நிறுவனங்களுக்கான அமெரிக்காவின் துணைச் செயலர் எஸ்தர் பிரிம்மர்.
எதிர்ப்பு
இலங்கை குறித்த தீர்மானம் மார்ச் மாதம் மதியப் பகுதியில்தான் விவாதத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் பிரிட்டனின் சேனல் 4 அனுசரணையுடன் தயாரிக்கப்பட்டுள்ள நே பயர் சோன் திரைப்படத்தை ஐ நா வளாகத்திற்குள் திரையிடக் கூடாது என்று இலங்கை குழு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அப்படிச் செய்வது ஐ நா விதிகளை மீறுவதாக இருக்கும் என்று இலங்கை அதிகாரிகள் புகார் கூறியுள்ளனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இலங்கை மீது புதிய தீர்மானம் கொண்டுவரப்படும்: அமெரிக்கா
» 21-ம் நூற்றாண்டின் முக்கிய நட்புறவுகளில் இந்திய-அமெரிக்கா நட்பு குறிப்பிடத்தக்கது - அமெரிக்கா அறிவிப்பு
» ஐ.நா வில் இன்று அமெரிக்க தீர்மானம் சமர்ப்பிக்கப்படுகின்றது.
» எஸ்.ஏ.சந்திரசேகரன் அணி மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம்
» 4 கட்சிகள் இணைந்து 'த.தே.கூ'வை பதிவுசெய்ய தீர்மானம் நிறைவேற்றம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum