பீர் ‘சரக்கு’ போதை போல ஐஸ்கிரீம் ஆசையும் ஆபத்து
Page 1 of 1

பார்க்கிற போதெல்லாம் ஐஸ்கிரீம் தின்பவரா நீங்கள்.. எச்சரிக்கையாக இருங்கள். மது, கோகைன் போதை பொருள் போல ஐஸ்கிரீமும் உங்களை அடிமையாக்குகிற ஆபத்து இருக்கிறது என்கின்றனர் விஞ்ஞானிகள். உணவு பழக்கம் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாக அமெரிக்காவின் ஆரிகன் மாநில ஆய்வு கழக பேராசிரியர் கைல் பர்கர் தலைமையில் சமீபத்தில் ஒரு ஆய்வு நடந்தது.
இதுபற்றி பர்கர் கூறியதாவது: பலர் மது குடிக்கிறார்கள். சிலர் மட்டுமே அடிமையாகிறார்கள். இந்த வேறுபாட்டுக்கு காரணம் மூளையின் ‘திருப்தித்தன்மை’. ஆரம்பத்தில், கொஞ்சம் குடித்ததுமே ‘போதும்’ என்ற உணர்வு ஏற்பட்டுவிடும். நாளாவட்டத்தில், சற்று அதிகம் குடித்தால்தான் இந்த திருப்தி உணர்வு ஏற்படும்.
‘இதுதான் லிமிட்’ என்று தீர்மானித்து நிறுத்துபவர்கள் தப்பிவிடுகின்றனர். அந்த திருப்தித்தன்மையுடன் மல்லுக்கட்டுபவர்கள் மேலும் மேலும் குடித்து அடிமையாகின்றனர். மது, கோகைன் மட்டுமல்ல..
தொடர்ந்து சாப்பிட்டால் ஐஸ்கிரீமுக்கும் அடிமையாகிவிடும் அபாயம் இருக்கிறது. கொழுப்பு சத்து, சர்க்கரை அதிகம் உள்ள ஐஸ்கிரீம் போன்ற உணவு பொருள்களை தொடர்ச்சியாக சாப்பிடும்போது, மூளையின் ‘திருப்தித்தன்மை’யில் மாற்றம் உண்டாகிறது. ஐஸ்கிரீமை மூளை அடிக்கடி எதிர்பார்க்கத் தொடங்கும். இது ஏறக்குறைய, கோகைன் போன்ற போதை பொருளுக்கு அடிமையானவரின் மனநிலை ஆகும்.
இவ்வாறு கைல் பர்கர் கூறினார். தொடர்ச்சியாக ‘ஜங்க் புட்’ சாப்பிடுவதால் அதற்கு அடிமையாகும் ஆபத்து இருப்பதாக ஏற்கனவே நடந்த ஆராய்ச்சிகளில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஏ.ஆர். முருகதாசின் ஆசையும், கனவும்!
» அச்சமும் ஆசையும் கூடாது
» பீர் ஃபேஷியல்
» உப்பு, சரக்கு, தம்.. உஷார் ஹை பீ.பி. நெருங்காது
» 'நான் சரக்கு நீ ஊறுகாய்’ படத்தில் குரங்குடன் நடிக்கும் பவர்ஸ்டார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum