தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வருவது ஏன் வந்தால் என்ன சிகிச்சை?

Go down

வருவது ஏன் வந்தால் என்ன சிகிச்சை?  Empty வருவது ஏன் வந்தால் என்ன சிகிச்சை?

Post  ishwarya Wed Feb 27, 2013 1:10 pm

இன்று உலக ஆர்த்ரைடிஸ் தினம் ஆகும். இந்நோய்க்கான அறிகுறிகள் மற்றும் குணப்படுத்தும் வழிகள் குறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மூட்டு தசை, சதை இணைப்பு திசு துறையின் பேராசிரியர் ராஜேஸ்வரி கூறியதாவது:

ஆர்த்ரைடிஸ் (மூட்டு வீக்கம் நோய்) என்பது, உள்உறுப்புகள் பாதித்து இருப்பதால் மூட்டு பகுதியில் வீக்கம், வலி ஏற்படுத்தி நோயின் அறிகுறிகளை நமக்கு தெரியப்படுத்துவதாகும். ஆர்த்ரைடிஸ் நோய் நிறைய வகைகள் உள்ளது. முடக்குவாதம், மூட்டு தேய்மானம், தண்டு எலும்பு வாதம், எஸ்.எல்.இ., முதுகுவலி, எலும்பு தின்மை குறைவு, நோய்தொற்று காரணமாக வரும் சிக்கன்குன்யா காய்ச்சல் கூட ஆர்த்ரைடிஸ் வகையைச் சார்ந்ததுதான்.

ஒருவருக்கு முடக்குவாதம் ஏற்பட்டால் கை, கால், மணிக்கட்டு, கால் பாதம் பகுதியில் உள்ள இணைப்பு பகுதியில் வலி மற்றும் வீக்கம் ஏற்படும். இரவு படுத்துவிட்டு காலை எழும்பும்போது கால் ஊன்றி நடக்க முடியாத அளவுக்கு வலி ஏற்படும். சிறிது நேரம் போக போக இது சரியாகும். இதுபோன்று பிரச்னை இருந்தால், இந்நோய் பற்றி தெரிந்த டாக்டர்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும். இதற்காக உள்ள சிறப்பு ரத்த பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை மூலம் நோயை கண்டறிந்து மருந்து, மாத்திரை மற்றும் சரியான உடற்பயிற்சி மூலம் சரிப்படுத்த முடியும்.

முடக்குவாதம் நோயை அப்படியே விட்டு விட்டால் ஒருவர் 5 முதல் 10 ஆண்டுகளில் வேலையை விட்டு விட்டு வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்படும். சீக்கிரம் நோயை கண்டுபிடித்தால் குணப்படுத்த முடியும். அப்படியே விட்டால் மூட்டு மட்டும் அல்லாமல் நுரையீரல், சிறுநீரகம், இதயம் மற்றும் சதை இணைப்பு திசு, நரம்பு உள்ளிட்ட எல்லா உறுப்புகளும் பாதிக்கும். முடக்குவாதம் நோயால் உலகத்தில் ஒரு சதவீதம் பேரும், இந்தியாவில் 0.75 சதவீதம் பேரும் பாதித்துள்ளனர்.

மூட்டு தேய்மானம் நோய் என்பது வயதானவர்களுக்கு, உடல் குண்டானவர்கள், விளையாட்டு வீரர்களுக்கு வரும் பிரச்னை ஆகும். மூட்டு வலி, வீக்கத்தை வைத்து நோயை கண்டுபிடிக்கலாம். எலும்பு தின்மை குறைவு என்பது மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு சாதாரணமாக வரும் நோயாகும். ஹார்மோன் குறைவு காரணமாக ஏற்படும் பிரச்னை. சரியான சிகிச்சை அளித்து, நோய் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.

தண்டு எலும்பு வாதம் நோய் ஆண்களுக்கு வரக்கூடிய நோயாகும். 20 முதல் 30 வயதுள்ளவர்களை அதிகம் பாதிக்கிறது. ஜெனிட்டிக் பிரச்னை காரணமாக இந்நோய் அதிகமாக வருகிறது. எஸ்.எல்.இ. இளம் பெண்களுக்கு வரும் நோய். இவர்களுக்கு தீக்காயம் ஏற்பட்டதுபோன்று தோலில் பாதிப்பு ஏற்படும். தலைமுடி உதிர்வதுடன், சிறுநீரகம் பாதித்து ரத்த அணுக்கள் குறைந்து விடும். அதனால் ஆர்த்ரைடிஸ் நோய் அறிகுறிகள் தென்பட்டால் மூட்டு வீக்கம் நோய் பற்றி தெரிந்த டாக்டர்களை அணுகி சிகிச்சை பெற்றால் குணப்படுத்த முடியும். இவ்வாறு பேராசிரியர் ராஜேஸ்வரி கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கொப்புளிப்பான் / அம்மைவருத்தம் வந்தால் செய்யவேண்டியது என்ன?
» குட்டீஸ்க்கு தாளம்மை வந்தால் என்ன செய்யலாம்?
» என் மகன் 12ம் வகுப்பு படிக்கிறான். அடிக்கடி பிரமை பிடித்ததுபோல இருக்கிறான். வெளியாட்கள் வந்தால் பயப்படுகிறான். கடந்த ஒரு வருடமாக மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும், பூரண குணமடையவில்லை. என்ன செய்ய வேண்டும்?
» இதய நோய்களுக்கு இனி அறுவை சிகிச்சை தேவை இல்லை :புதிய சிகிச்சை கண்டுபிடிப்பு!
» மஞ்சள் காமாலை வந்தால்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum