என் மகன் 12ம் வகுப்பு படிக்கிறான். அடிக்கடி பிரமை பிடித்ததுபோல இருக்கிறான். வெளியாட்கள் வந்தால் பயப்படுகிறான். கடந்த ஒரு வருடமாக மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும், பூரண குணமடையவில்லை. என்ன செய்ய வேண்டும்?
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1

ஒன்றும் பயப்படாதீர்கள். ஆனால், உங்கள் வீட்டில் உடலும், மனமும் புழுங்கும் இறுக்கமான சூழலை உருவாக்காதீர்கள். பழைய துணிகள், துர்நாற்றம் வீசும் பொருட்கள் என்று எதையும் வைக்காதீர்கள்.
தினமும் காக்கைக்கு அன்னமிடுங்கள். யாராவது செய்வினை செய்திருப்பார்களா என்று கேட்டிருக்கிறீர்கள். அப்படி எதுவுமில்லை... தினமும் சிவாலயத்தில் அருள்பாலிக்கும் துர்க்கை சந்நதிக்கு மகனை அழைத்துப் போங்கள்.
இயன்றபோது கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயிலுக்குப் போய் வாருங்கள். ஒரு சிவப்பு பிளாஸ்டிக் ப்ளேட்டை எடுத்துக்கொண்டு அதன்மேல் 2 கிலோ கறுப்பு உளுந்து நிரப்பி, நடுவே எவர்சில்வர் விளக்கு வைத்து இலுப்பை எண்ணெயால் விளக்கேற்றுங்கள்.
19 நாட்கள் தொடர்ந்து விளக்கு ஏற்றி, கீழ்க்காணும் ஸ்லோகம் சொல்லி நமஸ்கரியுங்கள். இது முடிந்ததும் ஆர் அல்லது கே எனும் எழுத்தில் ஆரம்பிக்கும் பெயருள்ள பெண் ஒருவருக்கு தானமாக கொடுத்து விடுங்கள்.
மகனின் முன்னேற்றத்தை விரைவில் காண்பீர்கள்.
மேதே ஸரஸ்வதி! வரே! பூதி!
பார்கவி! தாமஸி! நியதே! த்வம்
ப்ரளீதேசே! நாராயணீ!
நமோஸ்துதே!
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பி.இ. படித்த எனது அக்கா மகன் மேல்படிப்புக்காக அமெரிக்கா சென்றான். ஆனால், படிக்க முடியாமல் பாதியிலேயே வந்து விட்டான். இங்கு வந்தும் வேலைக்கு செல்லாமல் ஏதோ பிரமை பிடித்ததுபோல இருக்கிறான். என்ன செய்வது என்றே புரியவில்லை; குழப்பமாக இருக்கிறது.
» என் வயது 27. அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. 45 நாள் சென்றதும் யாரோ விரட்டி அடிப்பதுபோல பிரமை இருந்தது. மனநல டாக்டரிடம் வைத்தியம் பார்த்தேன். கடந்த இரண்டரை ஆண்டுகளாக மருந்து சாப்பிடுகிறேன். ஆனாலும் தூக்கம் இல்லாது அவதிப்படுகிறேன். என்ன செய்ய
» எனது மகனுக்கு ஒன்பது வயதாகிறது. சற்று மனவளர்ச்சி குன்றி காணப்படுகிறான். 90 சதவீதம் சாதாரணமாக இருந்தாலும், முழுத் தெளிவும் மனவளர்ச்சியும் இல்லை. அவன் பூரண நலம் பெற என்ன செய்ய வேண்டும்?
» எனது வயது 45. திருமணமாகி 25 வருடமாகிறது. எங்களுக்கு 3 பெண்கள், 1 பையன். கடந்த 2 வருடமாக என் கணவர் வேறொரு பெண்ணோடு தொடர்பு கொண்டிருக்கிறார். குழந்தைகளும் நானும் கலங்கிப் போய் நிற்கிறோம். நான் என்ன பரிகாரம் செய்தால் அவர் மனம் திருந்துவார், திரும்புவார்?
» சிவராத்திரியன்று என்ன செய்ய வேண்டும்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum