தோள்பட்டை வலி தொந்தரவு வந்தால்...
Page 1 of 1
தோள்பட்டை வலி தொந்தரவு வந்தால்...
தோள்பட்டை மூட்டு, எலும்பு, தசை, அவை சார்ந்த கழுத்துப் பகுதி ஆகியவை மனிதர்களுக்கு அவ்வப்போது தொந்தரவு தருகிறது.
* இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள், கம்ப்யூட்டர்களில் அமர்ந்து அதிக நேரம் வேலை பார்ப்பவர்கள், இருக்கைகளில் சரியான முறையில் அமராதவர்கள், எக்கி பொருட்களை தூக்குகிறவர்கள் கையைத் தலைக்கு கீழே மடக்கி வைத்து தூங்குகிறவர்கள், உடற்பயிற்சியில் தோள் மூட்டுக்கு அதிக வேலை கொடுப்பவர்கள் இப்படி யாருக்கு வேண்டுமானாலும், தோள்பட்டை வலி, புஜப் பகுதி வலி, கழுத்து எலும்புப் பகுதி வலி போன்றவை ஏற்படலாம்.
* தோள்பட்டை வலிக்கும், இதய நோயின் அறிகுறியான இடது புறத்தில் பரவும் வலிக்கும் உள்ள வித்தியாசத்தை சாதாரண மக்களால், துல்லியமாக கண்டுபிடிக்க இயலாது என்பது உண்மையாக இருந்தாலும், அவர்கள் வலி ஏற்பட்ட உடனே, பயந்து அது இதய நோயின் அறிகுறி என்று நினைத்து அச்சம் கொள்ள வேண்டாம்
* தோள்பட்டை மூட்டு பாதிப்பால் ஏற்படும் வலி என்றால், அது முழங்கை மூட்டுக்கும், தோள்பட்டைக்கும் நடுவில் (அசுஙுசூ) வலிக்கும். இரவில் படுக்கும் போது சிலருக்கு, இந்த வலி அதிகரிக்கும். கழுத்து எலும்புகளின் இடையே உள்ள ஜவ்வுகள் போன்றவை தேய்ந்தாலும், தோள்பட்டை வலி தெரியும்.
* சில சமயங்களில் ஊசியால் குத்துவது போன்று `சுருக்` என வலிக்கும். கழுத்தின் கீழ்ப்பகுதியில் இருந்து, கைவிரல் நுனி வரை இழுத்துப் பிடிப்பது போன்று வலி வரும்.
* தோள்மூட்டை உள்பக்கமும், வெளிப்பக்கமும் அசைக்கும் தசைநாரில் கால்சியம் உப்பு படிந்தாலும், வலி உருவாகும். இப்படி வலி ஏற்பட்டால், பயமில்லாமல், டாக்டரை அணுக வேண்டும். அது கழுத்து வலியா? தோள்பட்டை வலியா? `ரொட்டேட்டர் கப்’ தசை அழுத்தத்தால் ஏற்பட்ட வலியா? மூட்டு இணைப்பில் காச நோய் உருவானதால் ஏற்படும் வலியா? தோள் மூட்டின் மேல் உள்ள தசைகளில் கால்சியம் படிந்ததால், ஏற்படும் வலியா? என்பதை எக்ஸ்ரே மூலம் கண்டறிந்து விடலாம்.
* மிக நுண்ணிய அளவில், தசை சிதைந்து போயிருந்தால், அதனை எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் கண்டறியலாம்.
* பிசியோதெரபி, மருந்து மாத்திரைகளால் பெரும் பாலான தோள்பட்டை வலிக்கு நிவாரணம் கிடைத்து விடும்.
* மூட்டு அசைவு குறைந்து, வலி ஓரளவுக்கு மேல் அதிகமாகி, அதனால் இரவில் தனது தூக்கத்தை தொலைத்தவர்களுக்கு சிறப்பு வைத்தியம் அவசியமாகிறது. குறிப்பாக, தோள்பட்டை மூட்டிலுள்ள வலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, சின்ன வேலை செய்யக்கூட கையை சற்று தூக்கினாலே வலிக்கும்.
* இது போன்றவர்களுக்கு தொடர்ந்து தேவையான மருந்து மாத்திரைகள், பிசியோதெரப்பி கொடுத்த பின்னும் வலி இருந்தால், எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்வதன் மூலம் தோள்பட்டை மூட்டு எலும்பில் பிரச்சினையா?, சுழல் தசைகளின் கோர்வையில் (தச்ஞ்ஹஞ்ச்சு இஞிகிகி) உள்ள தசை நார்கள் நைந்து, பிய்ந்துள்ளதா? என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
* மேலும் அறுந்து போகாதபடி அறுவைச் சிகிச்சை செய்வது அவசியமாகிறது.
இதனால் தோள்பட்டை வலி நன்றாக குறைந்து, தொலைந்து போன அசைவை மீண்டும் வலியின்றி பெறலாம்.
“தோள்பட்டை எலும்பு வலுவாக, ஒரு நல்ல சாப்பாடு இருந்தா சொல்லுங்க டாக்டர்” என்று பலரும் கேட்பார்கள். நமது உடலில் எலும்பும் தசையும் ஒன்றை ஒன்று சார்ந்து செயல்படுகிறது. நாம் தசைக்கு முறையான உடற்பயிற்சி கொடுத்தால், அது எலும்புக்கு கொடுக்கப்படும் டானிக் போல அமைந்து, வலியின்றி வாழ வழிவகுக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தோள்பட்டை வலி குறைய
» பாலியல் தொந்தரவு
» தோள்பட்டை அழகாக...
» தோள்பட்டை வலிமை பெற பயிற்சி
» தோள்பட்டை அழகாக உடற்பயிற்சி
» பாலியல் தொந்தரவு
» தோள்பட்டை அழகாக...
» தோள்பட்டை வலிமை பெற பயிற்சி
» தோள்பட்டை அழகாக உடற்பயிற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum