தூங்கும்போது அதிக சப்தம் குறட்டையால் மாரடைப்பு அபாயம்...
Page 1 of 1

தூங்கும் போதே ஒரு வீடே தூக்கும் அளவுக்கு சிலருக்கு குறட்டை வரும். நிம்மதியாக தூங்குவதாக அவர்கள் நினைத்தாலும்; குறட்டை வந்தால் அதற்கு நல்ல தூக்கம் என்று சொல்ல முடியாது. குறட்டை சத்தத்தால் குடும்பத்தினரின் மற்றவர் தூக்கமும் அடியோடு பாதிக்கும். ரயில், பஸ்சில் பயணம் செய்யும் போது இப்படி குறட்டை ஆசாமிகள் பக்கத்து சீட்டில் இருந்தால் நிலைமை என்னாகும் என்று கொஞ்சம் யோசித்து பாருங்கள்.
முன்பு 60 வயதை கடந்தவர்களுக்கு தான் குறட்டை வருவதை கேள்விப்பட்டிருக்க முடியும். ஆனால் இப்போது 30 வயதிலேயே குறட்டை விடுபவர்களால் குடும்பமே இரண்டான சம்பவங்களும் நடக்கிறது.குறட்டை வருவதற்கான காரணம் குறித்து காது மூக்கு தொண்டை நிபுணர் டாக்டர் ஆர். ஆனந்த் கூறியதாவது:
குறட்டை இரு வகைப்படும். ஒன்று து�ங்கும் போது மெல்லியதாக சப்தம் ஏற்படுத்துவது. மற்றொன்று அதிக சப்தத்துடன் குறட்டை விடுவது. அதிக சப்தத்துடன் குறட்டை விட்டால் ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதய கோளாறு, வாயு கோளாறு, சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்பு ஏராளம் உள்ளன. மூக்கில் சுவாச காற்று குறைவாக சென்றால் குறட்டை வரலாம். தொண்டையில் காற்று செல்லும் பகுதி குறைவாக இருந்தாலும் வரும். மூச்சு குழாயில் அடைப்பு ஏற்பட்டாலும் வரும். மூச்சு குழாயில் அடைப்பு ஏற்பட்டால் உயிருக்கு ஆபத்து. மற்ற இரு வகையான குறட்டைகளை எளிய சிகிச்சை மூலம் குணப்படுத்தி விடலாம்.
மூக்கு துவாரங்களில் சதை வளருதல், தொண்டையில் டான்சில் கட்டி அதிகமாக இருத்தல், நாக்கின் பின் பகுதி தடிமனாக இருத்தல், பற்களின் கீழ்தாடை எலும்பு உள்வாங்கி இருத்தல், உள்நாக்கு பகுதியில் கொழுப்பு அதிகமாக சேர்ந்து இருத்தல் போன்றவைகளால் குறட்டை அதிகமாக ஏற்படுகிறது. தூங்கிய போது அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு திடீரென நின்று விடும். அப்போது ஒரு நிமிடம் மூச்சு, பேச்சு இன்றி காணப்படுவார்கள். இவை உயிருக்கு ஆபத்தானவை. இதனை உடனடியாக உரிய மருத்துவரிடம் சென்று சரி செய்ய வேண்டும். இல்லையெனில் தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்து விடும்.
அதிக சப்தத்துடன் குறட்டை விடுபவர்களுக்கு மறுநாள் சோர்வு ஏற்படும். காலையில் தூக்கம் வரும். ஞாபக மறதியும் ஏற்படும். ஏப்பம் விடுவார்கள். குறட்டை விட்டால் வயிறு பெருகும். கொழுப்பு சத்து அதிகரித்தால் குறட்டையும் வந்து விடும். உடல் எடையை குறைக்க வேண்டும். நடை பயணம், உடற்பயிற்சி செய்யலாம். மூக்கில் சதை வளர்ந்தால் அவற்றினை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தி விடலாம். லேசர் மூலம் சதை வளர்ச்சியை குறைத்து விடலாம். உள்நாக்கு பகுதியில் சதையை குறைக்கவும் லேசரை பயன்படுத்தலாம். காலையில் வந்து அறுவை சிகிச்சை செய்தால் மாலையில்வீடு திரும்பி விடலாம். இதற்கான நவீன சிகிச்சை முறைகள் வந்துள்ளன.
60 வயது கடந்தவர்கள் அதிகமாக குறட்டை விட்டால் அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாது. இப்படிப்பட்டவர்களுக்கு குறட்டையை கட்டுப்படுத்த நவீன கருவிகள் உள்ளன. இந்த கருவியின் டீயுப்பை மூக்கில் பொருத்தினால் போதும் குறட்டை சப்தம் குறைந்து விடும். கோவையில் பலர் குறட்டையால் பாதிக்கப்பட்டு கருவியை பொருத்தி நிம்மதியான தூக்கத்தை அனுபவித்து வருகின்றனர்.
25 வயது முதல் 50 வயதானவர்களுக்கு தான் குறட்டை அதிகமாக வருகிறது. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வருவது இல்லை.
தூங்கிய போது அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு திடீரென நின்று விடும். அப்போது ஒரு நிமிடம் மூச்சு, பேச்சு இன்றி காணப்படுவார்கள். இவை உயிருக்கு ஆபத்தானவை. இதனை உடனடியாக உரிய மருத்துவரிடம் சென்று சரி செய்ய வேண்டும். இல்லையெனில் தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்து விடும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இரவில் அதிக நேரம் உழைக்கும் ஐடி, பிபீஓ ஊழியர்களுக்கு மாரடைப்பு வர அதிக வாய்ப்பு
» தூக்கம் குறைந்தால் மாரடைப்பு அபாயம்!
» புத்துணர்ச்சி தரும் சக்தி பானங்களால் மாரடைப்பு ஏற்படும் அபாயம்:
» கார்போஹைட் வகை உணவினை உட்கொள்ளும் பெண்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகம் – புதிய மருத்துவ ஆராய்ச்சி
» நில்... கவனி... அபாயம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum