தூக்கம் குறைந்தால் மாரடைப்பு அபாயம்!
Page 1 of 1
தூக்கம் குறைந்தால் மாரடைப்பு அபாயம்!
தாமதமாகத் தூங்கி அதிகாலையில் கண் விழிக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள்? அப்படியெனில் உங்களுக்கு பக்கவாதம், மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் தாக்கும் அபாயம் அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இரவில் ஆறு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு இருதய நோயால் அல்லது மாரடைப்பால் உயிரிழப்பதற்கு மற்றவர்களை காட்டிலும் 48 சதவிகிதம் அதிக வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 6 மணி நேர தூக்கம் அவசியம்இரவில் தாமதமாக தூங்குவதும், அதே சமயம் உடற்பயிறசி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அதிகாலையில் எழுவதும் இன்றைய இளம் தலைமுறையினரிடையே அதிகரித்து வரும் பழக்கமாக உள்ளது. உடல் பயிற்சிக்காக தூக்க நேரத்தை குறைக்கும் இளைஞர்களுக்கு அதில் உள்ள ஆபத்து புரிவதில்லை.
ஏழு மணி நேரம் மிக நல்லது, முடியா விட்டால் 6 மணி நேரமாவது கட்டாயம் தூங்க வேண்டும். இல்லாவிட்டால் அதுவே ஆபத்தாகிவிடும் என்கின்றனர் ஆய்வாளர்கள். அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 8 நாடுகளில், சுமார் 4.7 இலட்சம் பேரிடம் வார்விக் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்விலும் இது நிரூபணமாகியுள்ளது.
‘பின் தூங்கி முன் எழுவது உடலிலேயே கட்டிக்கொண்டிருக்கும் ‘டைம்பாம்’ க்கு சமம் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இரவில் 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினாலோ அல்லது தூக்கம் பாதிக்கப்பட்டாலோ அவர்களுக்கு மற்றவர்களை காட்டிலும் இருதய நோயால் இறப்பதற்கான வாய்ப்பு 48 வீதம் அதிகமாக உள்ளது.
மேலும் ‘ஸ்ட்ரோக்’கால் இறப்பதற்கான வாய்ப்பும் மற்றவர்களைக் காட்டிலும் 15 வீதம் அதிகமாக உள்ளது’ என்று தெரிய வந்துள்ளதாக வார்விக் பல்கலைக்கழக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் சர்க்கரை நோயும், உடல் பருமனும் இணைந்து டயப்ஸிட்டி என்ற நோய் வர அதிக வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தூக்கம் குறைந்தால் கேன்சர் தாக்கும் டாக்டர்கள் எச்சரிக்கை

» தூங்கும்போது அதிக சப்தம் குறட்டையால் மாரடைப்பு அபாயம்...
» புத்துணர்ச்சி தரும் சக்தி பானங்களால் மாரடைப்பு ஏற்படும் அபாயம்:

Permissions in this forum:
You cannot reply to topics in this forum