கார்போஹைட் வகை உணவினை உட்கொள்ளும் பெண்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகம் – புதிய மருத்துவ ஆராய்ச்சி
Page 1 of 1

அட்கின்ஸ் எனப்படும் குறைந்த கார்போஹைட்ரேட்டும், கூடிய புரதச் சத்து நிறைந்த உணவினை உட்கொள்ளும் பெண்களுக்கு மார்படைப்பு வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என புதிய மருத்துவ ஆராய்ச்சியொன்றில் கூறப்பட்டுள்ளது. எடையைக் குறைப்பதற்காக இது போன்ற உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ளும்படி மருத்துவர்கள் சிபாரிசு செய்கின்றனர். சமீப காலமாகவே பெண்கள் எடையைக் குறைப்பதற்கான முயற்சிகளில் அதிக நாட்டம் காட்டி வருவதால் அட்கின்ஸ் வகை உணவினை உட்கொண்டு வருகின்றனர்.
இதற்காக இயல்பான உணவு உட்கொள்ளும் பழக்கமுடையோரையும் , அட்கின்ஸ் வகை உணவினை உட்கொள்வோரையும் வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் அட்கின்ஸ் உணவு முறையை பின்பற்றும் பெண்களில் அதிகப்படியானோர் இருதய நோய்களால் பாதிக்கப்பட்டிருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். குறிப்பாக இளம்பெண்கள் அதிகப்படியானோர் எடையைக் குறைக்கும் நோக்கில் இது போன்ற உணவு வகைகளை உட்கொண்டதால் இருதய நோய்க்கு ஆளானதும் ஆராயச்சியில் கூறப்பட்டுள்ளது.
ஏதென்ஸ் பகோனா லஜியோ மருத்துவப் பல்கலைக்கழகம் ( Pagona Lagiou of the University of Athens Medical School )மேற்கொண்டிருந்த இந்த ஆராய்ச்சி தொடர்பான கட்டுரையை பிரித்தானிய மருத்துவ (British Medical Journal) வாரப்பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
குறைந்த கார்போஹைட்ரேட் – அதிக புரத வகை உணவுகள் மிகச் சத்தானவையே என்பதில் எந்த மாற்றங்களும் இல்லை என்ற போதிலும் கூட புரத உணவுகளை அதிகம் உட்கொண்டு கார்போஹைட்ரேட் பற்றாக்குறை ஏற்படும் போது அவை இதயத்தில் கொழுப்பாகச் சேர்ந்து மாரடைப்பை ஏற்படுத்துவதாக ஆராயச்சியாளர்கள் வருணித்துள்ளனர். எடையைக் குறைக்கிறோம் என்ற பெயரில் தினமும் ஒரு சிறிய ரொட்டித் துண்டினையும் , அவிக்கப்பட்ட முட்டையையும் மட்டுமே சாப்பிடுவோருக்கு மார்படைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 5 சதவீதம் அதிகம் என்கிறது ஆராய்ச்சி

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தூக்கம் குறைந்தால் மாரடைப்பு அபாயம்!
» தூங்கும்போது அதிக சப்தம் குறட்டையால் மாரடைப்பு அபாயம்...
» புத்துணர்ச்சி தரும் சக்தி பானங்களால் மாரடைப்பு ஏற்படும் அபாயம்:
» பெண்களுக்கு மாரடைப்பு அறிகுறி தெரிவதில்லை
» பெண்களுக்கு மாரடைப்பு நோய் அறிகுறிகள் பற்றி தகவல் !!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum