தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கேரட் - பேரீச்சம் பழம் - ஆரஞ்சு சாலட்

Go down

 கேரட் - பேரீச்சம் பழம் - ஆரஞ்சு சாலட்                        Empty கேரட் - பேரீச்சம் பழம் - ஆரஞ்சு சாலட்

Post  ishwarya Tue Feb 26, 2013 4:31 pm

என்னென்ன தேவை?

துருவிய கேரட் - 1 கப்,
பொடியாக நறுக்கிய பேரீச்சம் பழம் - 1 கப்,
ஆரஞ்சு சுளைகள் - 1 கப்,
கெட்டித் தயிர் - 2 கப்,
உப்பு - தேவைக்கேற்ப,
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்,
கடுகுத் தூள் - 1 டீஸ்பூன்,
லெட்டூஸ் இலை - அலங்கரிக்க.



எப்படிச் செய்வது?

தயிரை துணியில் வடிகட்டவும். தண்ணீர் எல்லாம் வடிந்ததும், அதை ஒரு கிண்ணத்தில் போட்டு, கை விடாமல் நுரைக்க அடிக்கவும். இதில் உப்பு, மிளகுத் தூள், கடுகுத் தூள், பேரீச்சம் பழத் துண்டுகள் சேர்த்து அடிக்கவும். இதை ஒரு கிண்ணத்தில் போட்டு, அதன் மேல் ஆரஞ்சு சுளைகள், கேரட் சேர்த்துக் கலக்கவும். பிறகு கலவையை லெட்டூஸ் இலையின் மேல் வைத்து, 1 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்துக் குளிரச் செய்து பரிமாறவும். இதை அப்படியேவும் சாப்பிடலாம். பிரெட் டோஸ்ட் உடனும் சாப்பிடலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum