சோயா கட்லெட்
Page 1 of 1
சோயா கட்லெட்
என்னென்ன தேவை?
சோயா உருண்டைகள் (பொடித்தது) - 1 கப்,
வேக வைத்த உருளைக்கிழங்கு - 2,
துருவிய பனீர் - 1 கப்,
மைதா மாவு, சோள மாவு - தலா 1 டேபிள்ஸ்பூன்,
மிளகாய் தூள், உப்பு - தேவைக்கேற்ப,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்,
மல்லித்தழை - தேவையான அளவு,
பிரெட் தூள் - சிறிது,
எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
சோயா உருண்டைகளை மிக்சியில் பொடித்துக் கொள்ளவும். அல்லது சோயா ஃபிளேக்ஸ் என்றே கடைகளிலும் கிடைக்கிறது அதைப் பயன்படுத்தலாம். பொடித்த சோயாவை வெந்நீரில் போட்டுப் பிழிந்தெடுத்து, மசித்த உருளைக்கிழங்கு, பனீர் துருவல், உப்பு, எலுமிச்சைச்சாறு, பச்சை மிளகாய், மல்லித் தழை, மிளகாய் தூள் சேர்த்துக் கலந்து, விரும்பிய வடிவத்தில் தட்டிக் கொள்ளவும்.
மைதா மாவையும் சோள மாவையும் சிறிது தண்ணீரில் கலந்து, அதில் கட்லெட்டை தோய்த்து, பிரெட் தூளில் பிரட்டவும். தோசைக்கல்லைக் காய வைத்து, அதில் கட்லெட்டை வைத்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் திருப்பிப் போட்டெடுத்து, தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum